13 : 14
لَهُۥ دَعۡوَةُ ٱلۡحَقِّۚ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَجِيبُونَ لَهُم بِشَيۡءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيۡهِ إِلَى ٱلۡمَآءِ لِيَبۡلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦۚ وَمَا دُعَآءُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ
(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. (மக்கள்) அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் அவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் வேறில்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை அழைக்கும்) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர வேறில்லை. (அவை அவர்களுக்கு எப்பலனையும் அளிக்காது.)