Skip to content
ஸூராக்களின் பட்டியல் /

هُود

هُود is chapter 11 of the Quran and has 123 verses. This page presents it in full in the Uthmani script, with a verse-by-verse translation of its meaning.

123 வசனங்கள் ஸூரா எண் 11
வசனத்திற்குச் செல்
தமிழ் · Omar Brief
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

الٓرۚ كِتَٰبٌ أُحۡكِمَتۡ ءَايَٰتُهُۥ ثُمَّ فُصِّلَتۡ مِن لَّدُنۡ حَكِيمٍ خَبِيرٍ

அலிஃப், லாம், றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிபவனிடமிருந்து இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டன. பிறகு, தெளிவாக்கப்பட்டன.

Explanation & meanings · 1
  1. ஸூரா பகராவின் 1-ஆவது வசனத்தின் அடிக்குறிப்பைப் பாருங்கள்.

أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۚ إِنَّنِي لَكُم مِّنۡهُ نَذِيرٞ وَبَشِيرٞ

“நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்காதீர்கள்” என்று (தெளிவுபடுத்தப்பட்டது). நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஓர் எச்சரிப்பாளன், ஓர் நற்செய்தியாளன் ஆவேன்.

وَأَنِ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ ثُمَّ تُوبُوٓاْ إِلَيۡهِ يُمَتِّعۡكُم مَّتَٰعًا حَسَنًا إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى وَيُؤۡتِ كُلَّ ذِي فَضۡلٖ فَضۡلَهُۥۖ وَإِن تَوَلَّوۡاْ فَإِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٖ كَبِيرٍ

இன்னும் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, (நன்மை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்வளிப்பான். அதிகமுடையவ(ர் அதை தர்மம் தரும் போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய அதிக(செல்வ)த்தை கொடுப்பான். நீங்கள் புறக்கணித்தால் ஒரு மாபெரும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.

إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. அவன் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.

أَلَآ إِنَّهُمۡ يَثۡنُونَ صُدُورَهُمۡ لِيَسۡتَخۡفُواْ مِنۡهُۚ أَلَا حِينَ يَسۡتَغۡشُونَ ثِيَابَهُمۡ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

(நபியே!) அறிவீராக! நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகின்றனர். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் சமயம் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.