Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 6 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்பவர், ஒரு மாட்டை 'குர்பானி' கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நான் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து விட்டு, ஒரு துணியால் அவர்களுக்குத் திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தம் கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி, தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் பாதங்களைக் கழுவினார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியை எடுத்துக்கொடுத்தேன். ஆனால், அதை அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை; தம் கைகளை உதறிக்கொண்டே சென்றுவிட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள் . பின்னர் விரல்களால்; தலை முடியின் அடிப்பாகம் நனையுமளவிற்கு கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.' நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா(ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்