Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 4 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'(ஷிர்க்கான வாசகம் மூலம்) மந்திரித்தல், தாயத்துகள் கட்டுதல் (கணவன் மனைவியர்கிடையே அன்பை ,(ஈர்ப்பை) ஏறபடுத்துவதற்காகச் செய்யும் திவலா (முறை) ஆகியன இணைவைப்பாகும்'.
சரியானது இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
உங்களது உடம்பில் வலியுள்ள பகுதியில் உங்கள் கையை வைத்து, இவ்வாறு கூறுங்கள் : "பிஸ்மில்லாஹ்" (3 தடவைகள்) "அஊது பில்லாஹி வகுத்ரதிஹி மின் சர்ரி மா அஜிது வஉஹாதிரு" (ஏழு தடவைகள்) 'அல்லாஹ்வைக் கொண்டும், அவனது ஆற்றலைக் கொண்டும் நான் உணரும், பயப்படும் இந்த வலியை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا». (பொருள் : மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
யார் ஒருவர் மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியைச் சுகம் விசாரிக்கச் சென்று அவரிடம் ஏழு முறை: أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ، அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக் என்ற துஆவை (பொருள் ';,அர்ஷின் இரட்சகனான மகத்தான அல்லாஹ்விடம் உம்மை குணமாக்கும்படி நான் வேண்டுகிறேன்') என்று கூறினால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை நிச்சயமாக குணமாக்குவான்'.
சரியானது இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது