Skip to content

'யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவனின் நற்செயல்கள் அழிந்து விடும்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

அஸ்ர் தொழுகையை நேர காலத்துடன் நிறைவேற்றுங்கள், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவனின் நற்செயல்கள் அழிந்து விடும்'.

بَكِّرُوا بِصَلَاةِ الْعَصْرِ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ».

இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
விளக்கவுரை

அஸ்ர் தொழுகையை வேண்டுமென்றே அதற்குரிய நேரத்தை தவிர்த்து பிற்படுத்தி தொழுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். அவ்வாறு பிற்படுத்தித்தியவரின் செயல் வீணாகி விடுவதோடு அது எவ்விதப் பெறுமானமுமற்றதாக ஆகிவிடுகிறது.

சொற்களுக்கான பொருள் (பதவிளக்கம்)

...:

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

அஸ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் பேணித் தொழுவதற்கு ஆர்வமூட்டபட்டுள்ளதுடன் அதற்காக விரைந்து செயற்படுதல் வேண்டும்.

அஸ்ர் தொழுகையை தொழாது அதற்குரிய நேரத்தை தவறவிடுவது ஏனைய தொழுகைகளை விட்டுவிடுவதை விட மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நடுத்தொழுகை என்று குறிப்பிடப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என கட்டளைப் பிரப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அல்லாஹ்: தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிடுகிறான். (பகரா : 238).

மேற்கோள்கள்

புஹாரி (1/ 115) (553).

முஸ்னத் அஹ்மத் (38/ 152) (23045).

மேலதிகமாக (9)

شرح رياض الصالحين.

لابن عثيمين (5/ 56).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمصطفى الخِن وغيره (2/ 777).

فيض القدير شرح الجامع الصغير (3/ 206).

بهجة الناظرين.

لسليم الهلالي (2/ 260).

تطريز رياض الصالحين.

لفيصل آل مبارك (ص614).