Skip to content

'உமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்;'

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரரும்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவருமான அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மகன் அபூ முஹம்மது அல் ஹஸன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டேன் :

'உமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்;'

«دَعْ مَا يَرِيبُك إلَى مَا لَا يَرِيبُكَ».

இமாம்களான திர்மிதி மற்றும் அந்நஸாஈ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரியானது
விளக்கவுரை

சொல் மற்றும் செயல்களில், குறித்த விடயம் தடுக்கப்பட்டதா ? இல்லையா? அல்லது அது ஹலாலா ஹராமா என்ற சந்கேகத்திற்கிடமானவற்றை விட்டு விட்டு எந்த சந்தேகமுமில்லாத நல்ல மற்றும் ஹலாலான –தெளிவாக அனுமதிக்கப்பட்ட- விடயங்களை செய்யுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

ஒரு முஸ்லிம் தனது எல்லா விடயங்களையும், உறுதியின் மீது கட்டியெழப்பி, சந்தேகங்களை விட்டுவிடுவதும், தனது மார்க்கத்தில் தெளிவான அறிவோடிருப்பதும் கட்டாயமாகும்.

சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்துவிடுவது தடுக்கப்பட்டுள்ளது.

நிம்மதியையும், மனஅமைதியையும் நீ அடைய விரும்பினால், சந்தேகத்திற்கிடமானவற்றைப் புறமொதுக்கிவிடு.

அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்துள்ள அருள். ஏனெனில், அவர்களுக்கு மனஅமைதியையும், நிம்மதியையும் தருபவற்றை அவன் ஏவி, தடுமாற்றத்தையும், கலக்கத்தையும் தருபவற்றைத் தடுத்துள்ளான்.

மேற்கோள்கள்

ஸுனன் அந்நஸாஈ (8/ 327) (5711).

ஸுனன் திர்மிதீ (4/ 286) (2518).

முஸ்னத் அஹ்மத் (3/ 248) (1723).

மேலதிகமாக (5)

التحفة الربانية في شرح الأربعين حديثًا النووية.

لإسماعيل الأنصاري (ص29).

شرح الأربعين النووية.

لابن عثيمين (ص153).

فتح القوي المتين في شرح الأربعين وتتمة الخمسين للنووي وابن رجب (ص56).