Skip to content

(முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்).

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் :

(முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்).

فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

நபி (ஸல்) அவர்கள் ரமழான் முடிந்த உடனேயே ஸகாத் அல்-பித்ர் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதன் அளவு ஒரு ஸாஉ ஆகும் (சுமார் 2.75 கிலோகிராம்)', இது நான்கு 'முத்துகளின் எடைக்கு நிகராகும். ஒரு முத்து என்பது ஒரு சராசரி நபரின் இரண்டு கைப்பிடி (பேரிச்சம்பழம் அல்லது பார்லி) அளவு ஆகும். ஸகாத்துல் பித்ர் முஸ்லிம்களில் - சுதந்திரமானவர் அடிமை, ஆண் அல்லது பெண், சிறியோர் அல்லது பெரியோர் என்ற வித்தியாசமுமின்றி அனைவர் மீதும் கடமையாகும். தனது சொந்த தேவைகளை விட அதிகமாகவும், தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை விட அதிகமாகவும் வைத்திருக்கும் அனைவர் மீதும் கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஸகாத் அல்-பித்ரை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

ரமழான் மாதத்துடன் தொடர்பான ஸகாதுபித்ர் இளைஞர்கள், முதியவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் அடிமைகள் - அனைவர் மீதும் கடமையாகும். இது குழந்தைகளின் சார்பாக அவர்களின் பாதுகாவலர்களும்; (வலி), அடிமைகளின் சார்பாக அவர்களின் எஜமானர்களும் நிறைவேற்ற வேண்டும். ஒருவர் தனக்கும், தனது குழந்தைகளுக்கும், தனது பராமரிப்பில் உள்ள அனைவர் சார்பாகவும் ஏழைகளுக்கு ஸகாத்துல் பித்ரை செலுத்த வேண்டும்.

கருவறையில் உள்ள சிசுவுக்கு ஸகாத்துல் பித்ர் கடமையாகமாட்டாது இருப்பினும், அதனை வழங்குவது (முஸ்தஹப்பாகும்) விரும்பத்தக்கது.

ஸகாத் அல்-ஃபித்ரில் என்ன கொடுக்கப்படும் என்பது பற்றியும், மேலும் அது மக்களின் வழக்கமான பிரதான உணவு என்ற விபரமும்.

பெருநாள் தொழுகைக்கு முன் ஸகாத்துல் பித்ரை கொடுப்பது கடமையாகும். அதனை பெருநாள் தினத்தன்று (தொழுகைக்கு முன்) காலையில் கொடுப்பது மிகவும் சிறந்தது. அத்துடன் பெருநாளைக்கு ஒரிரு தினங்களுக்கு முன்பும் கொடுக்கவும் அனுமதியுள்ளது.

மேற்கோள்கள்

புஹாரி (2/ 130) (1503).

முஸ்லிம் (2/ 679) (986).

மேலதிகமாக (6)

تيسير العلام.

لعبد الله البسام (ص309).

تنبيه الأفهام شرح عمدة الإحكام.

لابن عثيمين (3/ 406).

الإلمام بشرح عمدة الأحكام.

لإسماعيل الأنصاري (1/ 249).