Skip to content
الرَّعد /

வசனம் 31

13 : 31

வசனம் 31 of الرَّعد (13 : 31). This page carries the verse in the Uthmani script with a translation of its meaning, at a stable URL that can be cited on its own.

الرَّعد வசனங்கள் 43
ஸூரா · الرَّعد
தமிழ் · Omar Brief
13 : 31

وَلَوۡ أَنَّ قُرۡءَانٗا سُيِّرَتۡ بِهِ ٱلۡجِبَالُ أَوۡ قُطِّعَتۡ بِهِ ٱلۡأَرۡضُ أَوۡ كُلِّمَ بِهِ ٱلۡمَوۡتَىٰۗ بَل لِّلَّهِ ٱلۡأَمۡرُ جَمِيعًاۗ أَفَلَمۡ يَاْيۡـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعٗاۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ تُصِيبُهُم بِمَا صَنَعُواْ قَارِعَةٌ أَوۡ تَحُلُّ قَرِيبٗا مِّن دَارِهِمۡ حَتَّىٰ يَأۡتِيَ وَعۡدُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يُخۡلِفُ ٱلۡمِيعَادَ

(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால்... (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தைக் கொண்டும் அப்படி செய்யப்பட்டிருக்கும்.) மாறாக, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்)நிராகரித்தவர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம் படையுடன்) இறங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்.