சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்ற இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக்கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தல் இருப்பர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்ற இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக்கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தல் இருப்பர். அவர்கள் சலம் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, உமிழவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள். அவர்களது சீப்புக்கள் தங்கமாகும். அவர்களது வியர்வை கஸ்தூரியாகும். அவர்கள் நறுமணப் புகை போடும் கலசங்கள் நறுமணக் குச்சிகளால் ஆகியிருக்கும். அவர்களது மனைவியர் ஹூருல் ஈன்களாகும். அவர்கள் அனைவரும் ஒரே மனிதரின் தோற்றத்தில் இருப்பார்கள். (அதாவது) தமது தந்தையாகிய, ஆதமின் தோற்றத்தில் வானத்தில் அறுபது முழம் உயரத்தில் இருப்பார்கள்.
«إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الجَنَّةَ عَلَى صُورَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ، وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَمْتَخِطُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ، وَرَشْحُهُمُ المِسْكُ، وَمَجَامِرُهُمْ الأَلُوَّةُ الأَنْجُوجُ، عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمُ الحُورُ العِينُ، عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ، عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ، سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ».
இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர், அங்கு நுழையும் போது பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக் கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தில் இருப்பர். அவர்களுக்கு பரிபூரணத் தன்மைகள் இருக்கும். அதாவது, அவர்கள் சலம் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, உமிழவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள். அவர்களது சீப்புக்கள் தங்கமாகும். அவர்களது வியர்வை கஸ்தூரியாகும். அவர்கள் நறுமணப் புகை போடும் கலசங்களில் இருந்து, நல்ல, தூய்மையான நறுமணம் வீசும். அவர்களது மனைவியர் ஹூருல் ஈன்களாகும். அவர்கள் அனைவரும் ஒரே மனிதரின் தோற்றத்தில் இருப்பார்கள். (அதாவது) தமது தந்தையாகிய, ஆதமின் தோற்றத்திலும் உயரத்திலும் இருப்பார்கள். அவரது உடல் வானத்தில் அறுபது முழம் உயரத்தில் இருந்தது.
சுவனவாதிகளின் வர்ணனைகளைத் தெளிவுபடுத்தல். மேலும், அவர்கள் தமது படிநிலைகள் மற்றும் அமல்களுக்கு ஏற்ப வேறு பட்டிருப்பார்கள் என்பதையும் தெளிவுபடுத்தல்
கருத்துக்களைப் புரியவைக்கவும், விளக்கவும் உவமைகளைப் பயன்படுத்தல்.
குர்துபி அவர்கள் கூறுகின்றார்கள் : அவர்கள் தாடிகள் அற்றவர்களாகவும், அவர்களது தலைமுடி அழுக்கடையாததாகவும் இருக்கும் நிலையில் ஏன் அவர்களுக்கு சீப்பு தேவைப்படுகின்றதென்றோ, அவர்களது நறுமணம் கஸ்தூரியை விட வாசமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏன் வாசணை தேவைப்படுகின்றதென்றோ கேட்கப்படலாம். அதற்கான பதிலாவது, சுவனவாதிகள் அனுபவிக்கும் இன்பங்களான, உணவு, பானம், ஆடைகள், நறுமணங்கள் என்பன, பசியின் வலி காரணமாகவோ, அல்லது தாகத்தின் காரணமாகவோ, அல்லது ஆடையற்ற நிலையின் காரணமாகவோ, அல்லது துர்வாடையின் காரணமாகவோ அல்ல. மாறாக, அவையனைத்தும், தொடர்ச்சியாக வந்தடையும் இன்பங்களாகவும், அருட்கொடைகளாகவும் உள்ளன. அதில் உள்ள நுட்பமாவது, அவர்கள் இவ்வுலகில் எதில் இன்பத்தைக் கண்டார்களோ, அதே வகையில் அவர்கள் அங்கு இன்பம் அனுபவிப்பார்கள்.
புஹாரி (4/ 132) (3327).
முஸ்லிம் (4/ 2179) (2834).
மேலதிகமாக (2)
عمدة القاري شرح صحيح البخاري (15/ 209).
النهاية في غريب الحديث والأثر ص44.