Skip to content

எழுது கோள் மூவரை விட்டும் உயர்தப்படுகிறது: (மூவரின் செயல்கள் பதியப்படுவதில்லை) தூங்குபவர் விழித்தெழும்வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை, புத்திசுவாதின மற்றவர் அவரின் புத்தி தெளியும் வரை.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எழுது கோள் மூவரை விட்டும் உயர்தப்படுகிறது: (மூவரின் செயல்கள் பதியப்படுவதில்லை) தூங்குபவர் விழித்தெழும்வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை, புத்திசுவாதின மற்றவர் அவரின் புத்தி தெளியும் வரை.

«رُفِعَ الْقَلَمُ عن ثلاثة: عن النائم حتى يَسْتَيْقِظَ، وعن الصبي حتى يَحْتَلِمَ، وعن المجنون حتى يَعْقِلَ».

இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

ஆதமின் சந்ததிகளில் மூன்று நபர்களைத் தவிர மற்ற அனைரும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள், அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது அவசியம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த மூன்று நபர்களும் பின்வருமாறு : ஒரு குழந்தை வளர்ந்து பருவமடையும் வரை. புத்திசுவாதினமற்றவர்; அவரின் புத்தி தெளியும் வரை. தூங்குபவர் விழித்தெழும் வரை இந்த மூன்று பிரிவினரும் மார்க்கரீதியான கடமையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் தீமை செய்தால், அது அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படாது. ஆனால் ஒரு சிறு குழந்தை நன்மை செய்தால் அது பதிவு செய்யப்படுகிறது. ஆனால் ஒரு புத்திசுவாதீனமற்றவர் அல்லது தூங்கும் நபரின் நன்மை பதிவு செய்யப்படுவதில்லை. அவர்கள் உணர்வு நிலையில் இல்லாததால் அவர்களின் வழிபாடு செல்லுபடியாகாது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

மனிதர்கள் கடமைகளை செய்வதற்கு தகுதி பெறாமைக்கு மூன்று காரணங்கள் உள்ளன. அவை: 1- தூக்கம் காரணமாகக் தனக்குக் கடமையான காரியங்களைச் செய்ய அவன் விழித்திருக்க வில்லை. 2- அவரது இளம் வயது காரணமாக அவர் கடமைகளை செய்வதற்கான வயதை அடையவில்லை. 3- புத்திசுவாதீனம் அற்ற நிலையின் காரணமாக அவர் தனது அறிவைப் பயன்படுத்தும் திறனை இழந்துவிட்டார். இதனுடன் போதையின் நிலையையும் சேர்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், ஒருவரால் விடயங்களை வேறுபடுத்திப் புரிந்துகொண்டு சரியாக மதிப்பீடு செய்ய முடியாவிட்டால், சட்டங்கள் அவருக்குப் பொருந்தாது. அல்லாஹ், தனது நீதி, கருணை மற்றும் தாராள மனப்பான்மையால், -அவர்களின் குறைபாடுகளையும் மீறல்களையும் மன்னித்து- அவர்களைத் தண்டிக்கவில்லை.

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரிவினரின் தீய செயல்கள் பதிவு செய்யப்படாது என்பதன் அர்த்தம், அடிப்படையில் சட்டங்களும் நடைமுறைகளும் அவர்களுக்குப் பொருந்தாது என்பதல்ல. உதாரணமாக, ஒரு புத்திசுவாதினமற்றவர் இன்னொருவனைக் கொன்றால், அவன் தண்டிக்கப்படவோ அல்லது குற்றப்பணமோ செலுத்தத் தேவையில்லை. கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கு அவரது குடும்பத்தினர் உயிரீட்டுத் தொகையை செலுத்த வேண்டும்.

ஒரு நபர் பருவமடைந்துவிட்டார் என்பதற்கான மூன்று அறிகுறிகள் உள்ளன: (1) கனவின் மூலம் அல்லது பிற வழிகளில் விந்து வெளியேறுதல். (2) அந்தரங்க முடி வளர்ச்சி.(3) பதினைந்து வயதை எட்டுதல். பெண்களுக்கு மாத்திரம் நான்காவது மேலதிக விடயம் உள்ளது (4) மாதவிடாய் தொடங்குதல்.

இமாம் ஸுப்கி அவர்கள் கூறினார்கள்: 'பருவமடையாத குழந்தைகளை அரபியில் صَبِيٌّ மற்றும் غُلَامٌ என்று அழைப்பார்கள். ஆனால் சிலர் இவ்வாறு கூறுகிறாரகள்: தாயின் வயிற்றில் இருக்கும் போது جَنِينٌ (கரு) என்றும், பிறந்த பிறகு அது صَبِيٌّ என்றும், தாய்ப்பால் குடித்த பிறகு ஏழு வயது வரை غلام,என்றும் பத்து வயது வரை يافع, என்றும் பதினைந்து வயது வரை, حَزُورٌ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் صَبِيٌّ என்ற வார்த்தையை மேற்படி எல்லா நிலைகளுக்கும் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்

ஸுனன் அபூ தாவூத் (6/ 455) (4403).

ஸுனன் திர்மிதீ (3/ 93) (1423).

இமாம் நஸாஈயின் ஸுனனுல் குப்ரா (6/ 487) (7303).

ஸுனன் இப்னு மாஜா (3/ 199) (2042).

முஸ்னத் அஹ்மத் (2/ 254) (940).

மேலதிகமாக (6)

فتح ذي الجلال والاكرام بشرح بلوغ المرام.

لابن عثيمين (5/ 57).

توضِيحُ الأحكَامِ مِن بُلوُغ المَرَام.

للبسام (3/ 327).

منحة العلام في شرح بلوغ المرام.

لعبد الله الفوزان (7/ 582).