Skip to content

நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள்.

உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள்.

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْتَهِدُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مَا لَا يَجْتَهِدُ فِي غَيْرِهِ.

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
விளக்கவுரை

ரமழானின் இறுதிப் பத்துத் தினங்களும் வந்து விட்டால், ஏனைய காலங்களை விட, வணக்க வழிபாடுகளில் அதிக முயற்சியுடன், ஈடுபட்டு, பல்வேறுபட்ட நன்மைகளைக் கூடுதலாகச் செய்வார்கள். அவ்விரவுகள் மகத்தான சிறப்புடையவாக இருப்பதோடு, லைலதுல் கத்ரையும் தேடுவதே அதன் காரணமாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

பொதுவாக ரமழான் முழுதும், குறிப்பாக இறுதிப் பத்திலும் நிறைய நன்மைகளையும், வணக்க வழிபாடுகளையும் செய்யத் தூண்டல்.

ரமழானின் இறுதிப் பத்து இருபத்தியோராம் இரவு தொடக்கம், மாதம் முடியும் வரையாகும்.

சிறப்பான நேரங்களை வணக்கவழிபாடுகளில் கழிப்பது நல்லது.

மேற்கோள்கள்

முஸ்லிம் (2/ 832) (1175).

மேலதிகமாக (6)

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (14/ 463).

نزهة المتقين.

لمجموعة من الباحثين (2/ 848).

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (2/ 339).