'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்தில்;) கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் :
'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்தில்;) கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்'.
«إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللهِ الْأَلَدُّ الْخَصِمُ».
மனிதர்களில் சத்தியத்திற்கு அடிபணியாது எப்போதும் அதிகமாக குதர்க்கம் புரிந்து கொண்டிருப்பவனையும், தர்கத்தினால் தன்னை பாதுகாத்துக்கொள்ள முயல்பவனையும், அல்லது சத்தியத்தியத்திற்காக வாதாடி தனது வாதத்தில் எல்லை மீறிச்செல்பனையும், அறிவின்றி குதர்க்கத்தில் ஈடுபடுவனையும் அல்லாஹ் வெறுப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
...:
அநீதிக்குள்ளான ஒருவன் தனது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக மார்க்க விதிமுறைப்படி, சட்டபூர்வமான வழக்குகளின் அடிப்படையில் விவாதிப்பதில் ஆட்சேபனையில்லை, இது தடுக்கப்பட்ட தர்க்கங்களில் நுழைய மாட்டாது.
தர்க்கம் செய்வது, சச்சரவுகளில் ஈடுபடுவது நாவின் விபரீதச் செயல்களாகும், இது முஸ்லிம்களுக்கு மத்தியில் பகைமையையும் பிரிவிணையையும் ஏற்படுத்தக் காரணமாக அமைந்து விடும்.
சத்தியத்திற்காக நல்ல முறையில் தர்க்கித்தல் வாதாடுதல் வரவேற்கத்தக்க விடயமாகும். அது சத்தியத்தை நிராகரித்து அசத்தியத்தை நிலைநாட்டுவதற்காக அல்லது எவ்வித அடிப்படையோ ஆதாரமோ இல்லாத ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக தர்க்கம் செய்தால் அது கண்டிக்கத்தக்க தர்க்கமாகும்.
புஹாரி (3/ 131) (2457).
முஸ்லிம் (4/ 2054) (2668).
மேலதிகமாக (8)
توضيح الأحكام من بلوغ المرام.
للبسام (7/ 476).
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (10/ 308).
فتح ذي الجلال والإكرام.
لابن عثيمين (6/ 416).
سبل السلام بشرح بلوغ المرام.
للصنعاني (2/ 685).