12 : 25
وَٱسۡتَبَقَا ٱلۡبَابَ وَقَدَّتۡ قَمِيصَهُۥ مِن دُبُرٖ وَأَلۡفَيَا سَيِّدَهَا لَدَا ٱلۡبَابِۚ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ أَرَادَ بِأَهۡلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسۡجَنَ أَوۡ عَذَابٌ أَلِيمٞ
இருவரும், வாசலிற்கு முந்தினர். அவள் அவருடைய சட்டையை பின்புறத்தில் கிழித்தாள். வாசலில் அவளுடைய கணவரை இருவரும் பெற்றனர். “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையிடப்படுவது அல்லது (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு வேதனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை” என்று கூறினாள்.