Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 134 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

அறிவிப்பாளர்

எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (61)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) ஆண் துணையின்றி (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
"(பொய்) சத்தியம் செய்வது, பொருளை விலைபோகச் செய்யும்; இலாபத்தில் கிடைக்கும் பரக்கத்தை அழித்துவிடும்".
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
' மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள், மற்றவர்களுக்கு உணவளியுங்கள், உறவைப் பேணுங்கள், இரவில் மக்கள் தூங்கும்போது தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.'
சரியானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது. தங்கம் வெள்ளியை செலவளிப்பதை விடவும் உங்களுக்குச் சிறந்தது. மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்தது ஆகும். அதற்கு நபித்தோழர்கள் "ஆம்" அதனை எமக்கு காண்பித்துத் தாருங்கள் என்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் அதுதான் அல்லாஹ்வை- திக்ர் செய்வது –நினைவுகூர்வது என்றார்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
“ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'ஒரு மனிதன் வெகுமதிக்காகவும்; புகழுக்காகவும் போராடினால், அவனுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவனுக்கு எதுவும் கிடைக்காது' என்று கூறினார்கள். அவர் மூன்று முறை இக்கேள்வியைக் கேட்டார்; ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள், 'அவனுக்கு எதுவும் கிடைக்காது' என்று பதிலளித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், , 'நிச்சயமாக அல்லாஹ் , இதயசுத்தியுடனும், அவனின் திருமுகத்தை நாடியும் மாத்திரம் செய்யும் செயல்கள் தவிர எதனையும் ஏற்றுக்கொள்வதில்லை' எனக் கூறினார்கள்.”
சரியானது இதனை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்
ஒரு மனிதர் விருப்பமான ஒரு கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனவே, அவர் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, அதை (மக்களுக்குக்) கூறவும். அவ்வாறல்லாமல் வெறுக்கும் ஏதாவதொன்றைக் கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வரும். அதன் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன், யாரிடமும் அதைக் கூறாமலிருக்கட்டும். அப்போது, அது அவருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தமாட்டாது.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்