Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 34 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'ஒரு உண்மையான முஃமின் மற்றவர்களை குறை கூறபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்'.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் வுழூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' முஸ்லிமின் அறிவிப்பில்: உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் இரு கைகளையும் கழுவமுன் வுழூ செய்யும் பாத்திரத்தினுள் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அவரின் இருகைகளும் இரவில் எங்கிருந்தது- எதனைத் தொட்டது- என்பது பற்றி அவர் அறியமாட்டார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உம்மால் முடியாமலே போகட்டும்!' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து அதில் ஊதுவார்கள் பின் அதில், குல் ஹுவல்லா அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவாரகள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
"இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஒருவருடன் ஒருவர் முஸாபஹா செய்யும் போது, அவர்கள் பிரியும் முன்னரே அவ்விருவரின் (சிறிய) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன".
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
"நம்மிடமிருந்து ஒரு விடயத்தைக் கேட்டு, அதைக் கேட்டது போன்றே பிறருக்கு எத்திவைப்பருக்கு அல்லாஹ் செலிப்பை ஏற்படுத்துவானாக. அதை நேரடியாகக் கேட்டவரை விட எத்திவைக்கப்பட்டவர் அதிக அறிவுடையவராக இருக்கலாம்".
சரியானது இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது