Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 51 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது வாகனத்தை நான் இழந்துவிட்டேன் ஆகவே என்னை ஏற்றிச் செல்லுங்கள் என்று கூறியபோது, நபியவர்கள் என்னிடம் அதற்கான வசதி இல்லை என்று கூறினார்கள். அவ்வேளை ஒரு மனிதர் அவரை ஏற்றிச்செல்வதற்குரிய ஒரு நபரை நான் காட்டுகிறேன் என்று கூறியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'நன்மையான ஒரு காரியத்திற்கு யார் வழிகாட்டுகிறாரோ அவருக்கு அதைச் செய்தவரின் கூலியும் உண்டு' என்று கூறினார்கள்..
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்தில்;) கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அடிக்கடி சாபம் இடுபவர்கள், கியாமத் நாளில் சாட்சிகளாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'ஒரு உண்மையான முஃமின் மற்றவர்களை குறை கூறபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்'.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களாகவும் உள்ளனர். உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கெட்ட மனிதராகவோ, கெட்ட பேச்சுக்கள் பேசுகின்றவராகவோ இருக்கவில்லை. .அவர்கள் ' உங்களில் நற்பண்புடையவர் உங்களில் மிகவும் சிறந்தவர்'என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.