Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 2 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பறவைளில் கூரிய கால் நகங்களைக் கொண்டு வேட்டையாடி உண்ணும் அனைத்து பறவைகளையும் நபி (ஸல்) அவர்கள் (சாப்பிடத்) தடை செய்தார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன், தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்' எனக் கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை அது தடை செய்யப்பட்டதாகும்' எனக் கூறினார்கள். பின்னர் நபியவர்கள்', யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.