Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 72 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நுழைந்து, தொழுது விட்டு, நபியவர்களுக்கு ஸலாம் கூறினார். அப்போது நபியவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் அளித்து விட்டு, 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்று மீண்டும் தொழுதார். பின்பும் நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறியதும் நபியவர்கள் பதில் கூறிவிட்டு, (மீண்டும்) 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். (இவ்வாறு) மூன்று தடவை நிகழ்ந்த பின்னர் அம்மனிதர், 'உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதனை விட அழகாக என்னால் தொழமுடியாது. எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : "நீங்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், தக்பீர் கூறிவிட்டு, பின்பு உங்களால் இலகுவாக ஓதமுடியுமான சில அல்குர்அன் வசனங்களை ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அமைதியடையும் வரை ருகூஇலேயே இருங்கள். பின்பு எழுந்து நேரான நிலைக்கு வாருங்கள். பின்பு ஸுஜூத் செய்து, அமைதியடையும் வரை ஸுஜூதிலேயே இருங்கள். பின்னர் எழுந்து, அமைதியடையும் வரை அமர்ந்து கொண்டிருங்கள். இவ்வாறே உங்களது முழுத் தொழுகையிலும் செய்யுங்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் முஅத்தின் கூறுவது போன்று கூறுங்கள்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபியவர்கள் மரண தருவாயை அடைந்த போது, அவர்களது பெரும்பாலான வஸிய்யத் 'தொழகையையும், உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள், 'தொழகையையும், உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவையையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,' என்றே காணப்பட்டது. எந்தளவுக்கென்றால், உயிர் பிரிய அண்மித்து, அவர்களால் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ள முடியாத நிலையிலும் அதையே கூறிக் கொண்டிருந்தார்கள்.
சரியானது رواه النسائي في السنن الكبرى وابن ماجه
'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுக்கு முந்திய ஸுன்னாவில் قل يا أيها الكافرون قل هو الله أحد ஆகிய சூராக்களை ஓதினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன் : லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகியனவே அவை. ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும். அத்துடன் முஅத்தின் அதான் கூறி பஜ்ரும் உதயமாகிவிட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் என ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் ஒரு அறிவிப்பில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுகையின் பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
சரியானது இதன் எல்லா அறிவிப்புக்களும் இமாம் புஹாரீ, இமாம் முஸ்லிம் இருவரும் பதிவு செய்தவைகளாகும்
பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.
சரியானது இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்