Skip to content

யார் ஒரு மலையில் இருந்து விழுந்து, தற்கொலை செய்துகொள்கின்றாரோ, அவர் நரக நெருப்பில், என்றென்றும் நிரந்தரமாக அடி ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

யார் ஒரு மலையில் இருந்து விழுந்து, தற்கொலை செய்துகொள்கின்றாரோ, அவர் நரக நெருப்பில், என்றென்றும் நிரந்தரமாக அடி ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரகநெருப்பில் அதை அருந்திக் கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தன்னைக் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.

«مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا».

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

இங்கு நபியவர்கள் எச்சரிப்பதாவது, யாராவது ஒருவர் வேண்டுமென்றே தன் உயிரை மாய்த்துக் கொண்டால், அவர், அதற்கேற்ற கூலியாக, மறுமை நாளில் நரகநெருப்பில், இவ்வுலகில் எவ்வாறு தன்னை மாய்த்துக்கொண்டாரோ, அதே விதத்தில் தண்டிக்கப்படுவார். எனவே, யார் ஒரு மலையில் இருந்து விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர் மறுமையின் நரகத்தின் மலைகளில் இருந்து அதன் பள்ளத்தாக்குகளை நோக்கி நிரந்தரமாக விழுந்துகொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரக நெருப்பில் அதை அறுந்திக்கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் வயிற்றில் குத்தி, உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தனது வயிற்றில் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றறென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

ஒரு மனிதன் தனாகவே உயிரை மாய்த்துக் கொள்வது தடுக்கபட்டுள்ளமை. மேலும், அது, மோசமான தண்டனையைப் பெற்றுத் தரும் பெரும்பாவமாக உள்ளமை.

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது, உயிரை மாய்த்துக் கொள்ளும் சில வகைககளுக்கான உதாரணமாகும். மறுபுறம், (வேறு) எந்த விதத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டாலும், தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அதே விதத்தில அவர் தண்டிக்கப்படுவார். புகாரியின் அறிவிப்பில், நபியவர்கள் கூறியதாக, இவ்வாறு வந்துள்ளது : யார் தனது கழுத்தை நெறித்து (தற்கொலை செய்து) கொள்கின்றாரோ, அவர் மறுமையிலும் அதனை நெறித்துக் கொண்டே இருப்பார். யார் தன்னைத் தானே குத்தி (தற்கொலை செய்து) கொள்கின்றாரோ, அவர் மறுமையில் தன்னைக் குத்திக் கொண்டே இருப்பார்.

நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் "என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார்" என்று கூறியிருப்பது பற்றிப் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டள்ளன. 1. இது, யார் அது ஹராம் என்பதை அறிந்த பின்னரும், ஹலாலாகக் கருதிச் செய்கின்றாரோ, அவருக்குரியதாகும். அவர் காபிராவார். இது அவருக்கான தண்டனையாகும். 2. நிரந்தரமாக இருப்பதென்பதன் அர்த்தம், உதாரணமாக, 'அரசரின் ஆட்சியை அல்லாஹ் நிரந்தரமாக வைக்கட்டும்' என்று கூறப்படுவதைப் போல, நீண்டகாலம் இருப்பதே தவிர, உண்மையில் நிரந்தரமாக இருப்பதல்ல. 3. இதுவே அவருக்குரிய கூலியாகும். ஆனாலும், அல்லாஹ் தனது பேருபகாரத்தினால், முஸ்லிமாக மரணித்தவர் நரகில் நிரந்தரமாக இருக்கமாட்டார் என்று அறிவித்துள்ளான்.

இது, மறுமையின் தண்டனைகள், உலகக் குற்றங்களை ஒத்ததாக இருக்கும் அமைப்பில் வருபவையாகும். ஒரு மனிதன், தனக்குத் தானே குற்றமிழைத்துக் கொள்வதென்பது, பாவத்தில் ஏனையோருக்கு குற்றமிழைப்பதை ஒத்ததாகும். ஏனெனில் அவனது ஆத்மா அவனுக்கு உரித்தானதே அல்ல. மாறாக, அது அல்லாஹ்வுக்கு உரியதே. எனவே, அவன் அனுமதித்துள்ள விதத்திலே தவிர, அவனால் அதில் செயற்பட முடியாது.

மேற்கோள்கள்

புஹாரி (7/ 139) (5778).

முஸ்லிம் (1/ 103) (109).

மேலதிகமாக (4)

البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (3/ 306).

إرشاد الساري لشرح صحيح البخاري (8/ 414).

المفهم لما أشكل من تلخيص كتاب مسلم (1/ 310).

عمدة القاري شرح صحيح البخاري (21/ 291).