உங்களுக்குக் கீழால் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலால் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
உங்களுக்குக் கீழால் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேலால் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே, அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
«انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَهُوَ أَجْدَرُ أَلَّا تَزْدَرُوا نِعْمَةَ اللهِ عَلَيْكُمْ».
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் உலக விவகாரங்களான, பதவி, அந்தஸ்த்து, பணம் போன்றவற்றில் அவனை விடத் தாழ்ந்த, குறைந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்குமாறும், அவ்வாறான உலக விடங்களில் தன்னை விட மேலுள்ள, சிறந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்கவேண்டாம் எனவும் ஏவுகின்றார்கள். ஏனெனில் அவன் அவ்வாறு தனக்குக் கீழால் இருப்பவர்களைப் பார்ப்பதுவே, அல்லாஹ் தனக்குச் செய்துள்ள அருள்களை அற்பமாகக் கருதாமல் இருக்கப் பொருத்தமானதாகும்.
மனதிருப்தி என்பது விசுவாசிகளின் மிகச் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். மேலும், அது அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொள்வதன் ஒரு அடையாளமுமாகும்.
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இது பல்வேறுபட்ட நலவுகளை உள்ளடக்கியுள்ள ஒரு நபிமொழியாகும். ஏனெனில் ஒரு மனிதன், இவ்வுலகில் தன்னை விடச் சிறப்பிக்கப் பட்டவனைப் பார்த்தால், அவனது மனமும் அது போன்றதைத் தேடும். மேலும் அவன் தன்னிடமுள்ள இறையருள்களை அற்பமாகக் கருதுவான். மேலும், அவனது நிலையை அடைய அல்லது அந்நிலைக்கு சமீபமாவதற்காக ஆசைப்படுவான். பெரும்பாலான மனிதர்களிடம் இதுவே உள்ளது, ஆனால், உலக விவகாரங்களில், அவன் தனக்குக் கீழால் இருப்பவர்களைப் பார்த்தால், அல்லாஹ் தனக்குச் செய்துள்ள அருட்கொடைகள் அவனுக்குப் புலப்படும். அப்போது அவன் அவற்றிற்காக நன்றி செலுத்தி, பணிவுடன் நடந்துகொள்வதோடு, அவற்றின் மூலம் நற்கருமங்களில் ஈடுபடுவான்.
புஹாரி (8/ 102) (6490).
முஸ்லிம் (4/ 2275) (2963).
மேலதிகமாக (10)
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (7/ 261).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 534).
تطريز رياض الصالحين.
لفيصل آل مبارك (ص316).
توضيح الأحكام من بلوغ المرام.
لعبد الله البسام (7/ 287).
منحة العلام شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (10/ 17).
நூல்களில் மேற்கோள்
3 நூல்கள்மேலதிகமாக (3)
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 3«انْظُرُوا إلىٰ مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلا تَنْظُرُوا إلىٰ مَنْ هُوَ فَوقَكُم، فَهُوَ أَجْدَرُ ألا تَزْدَرُوا نِعمَةَ الله عَلَيْكُمْ».
- مجموعة زاد التربية الإسلامية (2)1«انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ»
- مجموعة زاد الحديث(3)1«انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَهُوَ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ الله عَلَيْكُمْ»