உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
«إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ».
சோம்பல் மற்றும் வயிறு நிறைந்திருத்தல் போன்ற காரணங்களினால் வாயைத் திறப்பதன் மூலம் ஒருவர் கொட்டாவி விட்டால் தனது கையை வாயில் வைத்து மூடிக்கொள்ளட்டும் என்று இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். ஏனெனில் அவ்வாறு திறந்த நிலையில் ஒருவர் கொட்டாவிவிட்டால் ஷைத்தான் அவரின் வாயினுள்ளே சென்று விடுகிறான். வாயில் கையை வைத்து மூடுவது ஷைத்தானுக்கு தடுப்பாக அமைந்துவிடுகிறது.
ஒருவர் கொட்டாவி விட நாடினால் தனது வாயை இயலுமானவரை திறக்க முடியாத அளவிற்கு அடக்கிக் கொள்ளட்டும். அவ்வாறு முடியாவிட்டால் தனது கையை வாயில் வைத்து மூடிக்கொள்ளட்டும்.
இஸ்லாமிய பண்பாடுகளை எல்லா நிலைகளிலும் கடைப்பிடித்தல்ز ஏனெனில் அதுவே இஸ்லாத்தின் பரிபூரண தன்மைக்கும் பண்பாட்டிற்கும் முகவரியாக காணப்படுகிறது.
மனிதனின் மீது ஷைத்தான் நுழையும் அனைத்து வழிகளிலிருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் (4/ 2293) (2995).
மேலதிகமாக (8)
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 151).
شرح رياض الصالحين.
لابن عثيمين (4/ 436).
تطريز رياض الصالحين.
لفيصل آل مبارك (ص529).
نزهة المتقين شرح رياض الصالحين.
مجموعة من الباحثين (1/ 679).
நூல்களில் மேற்கோள்
3 நூல்கள்மேலதிகமாக (3)
- تحفة الأخيار تحفة الأخيار (ببيان جملة نافعة مما ورد في الكتاب والسنة من الأدعية والأذكار)«إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ» [96]
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 5«إذَا تَثَاءَبَ أحَدُكُمْ فلْيُمْسكْ بيَدِه عَلَىٰ فيهِ، فإنَّ الشَّيْطانَ يَدْخُلُ».
- مجموعة زاد التربية الإسلامية (3)، والسيرة النبوية (3)التربية الإٍسلامية -3- «إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ»