Skip to content

ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: (ரமழானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறைவனை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்.

உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் :

ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: (ரமழானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறைவனை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்.

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

ரமழானின் கடைசிப் பத்து நாட்கள் வந்தவுடன், இரவு முழுதும் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள், தங்கள் குடும்பத்தினரை தொழுகைக்காக எழுப்புவார்கள். வழமையை விட அதிகமாக வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அத்துடன் உடலுறவு கொள்வதிலிருந்தும், மனைவியரிடமிருந்தும் விலகி இருப்பார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

சிறப்புக்குரிய நேரங்களைப் பயன்படுத்தி நற்காரியங்களில் ஈடுபட ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

இந்த ஹதீஸ்: 'ரமழானில்; இறுதிப் பத்து நாட்களில் வணக்க வழிபாடுகளை அதிகமாக செய்வதையும்; அவ்விரவுகளை வணக்கங்களால் உயிர்ப்பிப்பதையும் வரவேற்கிறது' என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு நபரும் தனது குடும்ப உறுப்பினர்களின் ஆன்மீக மேம்பாட்டில் அதீத கவனம் செலுத்துவதோடு அவர்களை வணக்க வழிபாடுகளில் பங்கேற்க வலியுறுத்துவது அவசியமாகும். அத்துடன் இந்த விடயத்தில் நிதானமாகவும் பொறுமையுடனும் அவர்களுடன் நடந்து கொள்ளவும் வேண்டும்.

நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு மன உறுதியும், பொறுமையும், விடாமுயற்சியும் மிகவும் அவசியமாகும்.

இமமாம் நவவி இந்த ஹதீஸ் குறித்து குறிப்பிடுகையில் : ஹதீஸில் இடம் பெற்றுள்ள (ஷத்தல் மிஃதர) 'வேட்டியை இடுப்பில் இறுகக் கட்டுவது என்ற வாசகம் குறித்து; அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சிலர் நபி (ﷺ) வழக்கத்தை விட தனது வழிபாட்டை அதிகப்படுத்தினார் என்றும். இந்த சொற்றொடர் பொதுவாக வணக்கவழிபாடுகளில் மூழகியிருத்தல் என்றும் பொருட்கோடல் செய்துள்ளனர். மற்றும் சிலர் : இடுப்பை இறுகக்கட்டுவது என்பது வழிபாட்டிற்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது மனைவியிடமிருந்து விலகி இருப்பதைக் குறிக்க சிலேடையாக பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் என்கின்றனர்.

மேற்கோள்கள்

புஹாரி (3/ 47) (2024).

முஸ்லிம் (2/ 832) (1174).

மேலதிகமாக (4)

نزهة المتقين شرح رياض الصالحين.

لمجموعة من الباحثين (1/ 132).

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 181).