ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
«إزْرَةُ المُسْلمِ إلى نصفِ السَّاق، وَلَا حَرَجَ -أو لا جُنَاحَ- فيما بينَهُ وبينَ الكعبينِ، وما كان أسفلَ منَ الكعبين فهو في النار، مَن جرَّ إزارَهُ بطرًا لم يَنْظُرِ اللهُ إليه».
மனிதர்களின் உடம்பின் கீழ் அரைப் பகுதியை மறைக்கும் (வேட்டி போன்ற) ஆடைகளுக்கு மூன்று நிலைகள் இருப்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் முதலாவது : அரைக்கணுக்கால் வரை இருப்பதுவே விரும்பத்தக்கதாகும். இரண்டாவது : வெறுக்கப்படாமல் அனுமதிக்கப்படும் நிலை. அதாவது, பாதத்தையும் கணுக்காலையும் பிரிக்கும் கரண்டைக் கால் வரை இருத்தல். மூன்றாவது : தடுக்கப்பட்ட நிலை; அதாவது, கரண்டைக்காலுக்குக் கீழாக இருத்தல். இவரை நரக நெருப்புத் தீண்டலாம். அகம்பாவம், பெருமை மற்றும் கருவத்துடன் அவ்வாறு செய்திருந்தால், அல்லாஹ் அவரைப் பார்க்கமாட்டான்.
இந்த சட்டமும், எச்சரிக்கையும் ஆண்களுக்கு மாத்திரம் உரியதாகும். பெண்கள் இதிலிருந்து விதிவிலக்களிப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் தமது முழு உடம்பையும் மறைக்குமாறு ஏவப்பட்டுள்ளார்கள்.
காற்சட்டை மற்றும் இதர ஆடைகள் போன்ற, ஆண்களின் கீழ் அரைப்பகுதியை மறைக்கும் எதுவும் 'இதார்' (கீழ் ஆடை) என அழைக்கப்படும். எனவே அவை அனைத்தும் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டங்களில் அடங்கும்.
ஸுனன் அபூ தாவூத் (6/ 191) (4093).
ஸுனன் இப்னு மாஜா (4/ 583) (3573).
முஸ்னத் அஹ்மத் (17/ 52) (11010).
(1/ 16).
மேலதிகமாக (7)
نزهة المتقين شرح رياض الصالحين.
لمجموعة من الباحثين (1/ 637).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (2/ 95).
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (10/ 582).
المعجم الوسيط.
நூல்களில் மேற்கோள்
2 நூல்கள்மேலதிகமாக (2)
- قاموس الكبائرموسوعة الكبائر - المجموعة الخامسة«إِزْرَةُ الْمُسْلِمِ إِلَى نِصْفِ السَّاقِ وَلَا حَرَجَ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ، وَمَا كَانَ أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ فَهُوَ فِي النَّارِ، مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا (أَيْ: تَكَبُّرًا) لَمْ يَنْظُرِ اللَّهُ إِلَيْهِ»
- مجموعة زاد السيرة النبوية (2)1«إزرة المسلم إلى نصف الساق، ولا حرج -أو لا جناح- فيما بينه وبين الكعبين، وما كان أسفل من الكعبين فهو في النار».