Skip to content

"பிரச்சினைகளின் போது வணக்கத்தில் ஈடுபடுவது என்னிடம் ஹிஜ்ரத் வந்ததைப் போலாகும்".

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் :

"பிரச்சினைகளின் போது வணக்கத்தில் ஈடுபடுவது என்னிடம் ஹிஜ்ரத் வந்ததைப் போலாகும்".

«الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ».

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
விளக்கவுரை

குழப்பம், கலவரம், கொலைகள் மற்றும் மக்களின் நிலமைகள் சீரற்றுக் கிடக்கும் காலங்களில், வணக்க வழிபாடுகளில் முனைப்புடன் ஈடுபடுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். இத்தகைய காலங்களில் செய்யப்படும் வணக்கங்களுக்கான வெகுமதி நபி ﷺ அவர்களிடம் ஹிஜ்ரத் செய்ததற்குச் சமமான கூலியைப் பெற்றுத் தரும் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ஏனெனில், இவ்வாறான காலங்களில் மக்கள் இபாதத்தை அலட்சியப்படுத்தி விடுவார்கள் அதில் ஈடுபடாமல் பிற விஷயங்களில் மூழ்கி விடுவார்கள் சிலர் மட்டும் அதற்காக நேரம் ஒதுக்கி அதில் நிலைத்திருப்பார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த காலங்களில், அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அல்லாஹ் தஆலாவுடனான உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஊக்கம் அளிக்கப்பட்டிருத்தல்.

குழப்பங்கள் மற்றும்; மக்களின் அலட்சியமும் நிறைந்த காலங்களில், இபாதத்தின் மகத்தான சிறப்பை தெளிவுபடுத்தியிருத்தல்.

ஒரு முஸ்லிம், குழப்பமும், இறைநினைவை விட்டும் தூரப்படுத்தக்கூடிய அலட்சியம் நிறைந்த இடங்களையும் சூழல்களையும் தவிர்த்து, அவற்றிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும்.

மேற்கோள்கள்

முஸ்லிம் (4/ 2268) (2948).

மேலதிகமாக (4)

كشف المشكل من حديث الصحيحين (2/ 42).

البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (45/ 5).

بهجة الناظرين (2/ 455).

نزهة المتقين (ص942).