Skip to content

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்து மீளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவைகள் தௌபாச் செய்கிறேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர்களில் ஒருவராகிய அகர்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தௌபா செய்து மீளுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 தடவைகள் தௌபாச் செய்கிறேன்.

«يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللهِ، فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ».

இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
சரியானது
விளக்கவுரை

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்களுக்கு அதிகமாக தௌபா (பாவமீட்சி) மற்றும் இஸ்திஃபார் (பாவமன்னிப்புக் கோருதல்) செய்யுமாறு வலியுறுத்துகிறார்கள். தனது முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்த நிலையிலும் தான் ஒரு நாளைக்கு 100 தடவைக்கு அதிகமாக தௌபா மற்றும் இஸ்திஃபார் செய்வதாக தன்னைப்பற்றி நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது நபியவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுபடுவதிலும் பணிவாக நடந்து கொள்வதிலுமுள்ள அவர்களின் நிறைவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

இறைவிசுவாசத்தில் (ஈமானில்) ஒருவரின் நிலையும் அந்தஸ்தும் எப்படி இருந்தாலும் அவர் அல்லாஹ்விடம் மீண்டு தவ்பாவின் மூலம் தனது குறைகளை நீக்கி பரிபூரணப்படுத்திக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் விவகாரத்தில் குறை செய்யாத எவரும் கிடையாது என்பது யதார்த்தமான விடயமாகும். இந்த அடிப்படையில் அல்லாஹ் தவ்பா கோருமாறு பின்வரும் வசனத்தில் வலியுறுத்துகிறான். ( முஃமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பால் மீண்டு பாவமீட்சி (தவ்பாபாக்) கோருங்கள்.

தவ்பா ஒரு இபாதத் என்ற வகையில் தடைசெய்யப்பட்ட செயல்கள் மற்றும் பாவங்களைச் செய்ததற்காகவோ அல்லது கட்டாயக் கடமையொன்றை செய்வதில் நிகழ்ந்த குறைகள் மற்றும் தவறு போன்றவற்றுக்கு மாத்திரமின்றி அனைத்திற்கு பொதுவானதாகும்.

தவ்பா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இஹ்லாஸ் (தூய்மையான எண்ணம்) முக்கிய ஒரு நிபந்தனையாகும். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக ஒரு பாவத்தை விட்டு விடுபவர் தவ்பா செய்தவராக கருதப்படமாட்டார்.

இமாம் நவவி தவ்பா பற்றி பின்வருமாறு கூறுகிறார்: தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட மூன்று நிபந்தனைகள் உள்ளன: பாவத்தை விட்டுவிடுதல், அதைச் செய்ததற்காக வருத்தப்படுதல், மற்றும் அத்தகைய பாவத்தை ஒருபோதும் மீளச்செய்வதில்லை என உறுதிகொள்ளல் ஆகியனவாகும். அத்துடன் குறித்த பாவம் மற்றொரு நபரின் உரிமையுடன் சம்பந்தப்பட்டிருப்பின் அந்த உரிமையை மீளக் கொடுத்தல், அல்லது அநீதி இழைக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கோருதல் இது தவ்பாவின் நான்காவது நிபந்தனையாகும்.

நபியவர்கள் பாவமன்னிப்பு கோரியது அவர் பாவங்களைச் செய்தததற்காக அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, அது அவர்களது அடிமைத்தனத்தின் முழுமையையும், சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வை நினைவுகூருவதற்கான அவரது நிலையான தொடர்பையும், அல்லாஹ்வின் உரிமைகளின் மகத்துவம் மற்றும் ஒரு அடியான் அல்லாஹ்வின் அருள்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் அதில் குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது என்ற நபியவர்களின் விழிப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு நபியவர்கள் இஸ்திஃபார் மற்றும் தவ்பா போன்றவற்றில் ஈடுபாடு காட்டியமையின் நோக்களில் ஒன்று தனது சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பதாகும்.

மேற்கோள்கள்

முஸ்லிம் (4/ 2075) (2702).

மேலதிகமாக (6)

نزهة المتقين شرح رياض الصالحين.

لمجموعة من الباحثين (1/ 33).

شرح رياض الصالحين.

لابن عثيمين (1/ 97).

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 52).