உங்கள் மீது சந்தேகம் கொண்டதனால் நான் உங்களை சத்தியம் செய்யும்படி வேண்டவில்லை.என்றாலும் என்னிடம் ஜிப்ரீல் வந்து: நிச்சயமாக அல்லாஹ; உங்களைப் பற்றி பெருமையாக மலக்குகளிடம் பேசுகிறான் என்று என்னிடம் அறிவித்தார்கள்.
அபூ ஸஈதினில் குத்ரிய்யி ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஆவியா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் பள்ளியிலே வட்டமாக அமர்ந்திருந்தவர்களை விழித்து எதற்காக நீங்கள் உட்கார்ந்துள்ளீர்கள்? என வினவினார்கள் (என்ன விடயம் அமர உட்கார செய்தது?- என வினவினார்கள்.) அதற்கு அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக உட்கார்ந்தோம் என்று கூறினார்கள. அப்போது அல்லாஹ்வின் மீது ஆணையாக அதைத்தவிர வேறு நோக்கம் இல்லையா? என வினவினார்கள். அல்லாஹ்வின் மிது ஆணையாக அதைத்தவிர வேறு நோக்கம் கிடையாது,என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களில் சிலர் வட்டமாக அமர்ந்திருப்பதைக் கண்ணுற்றதும் அவர்களிடம் சென்று என்ன விடயம் உங்களை உட்கார செய்தது? என வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காகவும் மேலும் எமக்கு இஸ்லாத்தின் பக்கம் நேர் வழிகாட்டி அதன் மூலம் எம்மீது உபகாரம் புரிந்ததற்கு அவனைப் புகழ்வதற்காகவும் உட்கார்ந்தோம் என்று கூறினார்கள். நபியவர்கள்: அல்லாஹ்வின் மிது ஆணையாக அது தவிர வேறு நோக்கம் உங்களை உட்காரச் செய்ய வில்லையா?என வினவினார்கள். அல்லாஹ்வின் மிது ஆணையாக அதுதவிர வேறு நோக்கம் எம்மை இங்கு அமரச் செய்ய வில்லை என்றார்கள். அப்போது நபி அவர்கள் : உங்கள் மீது சந்தேகம் கொண்டதனால் நான் உங்களை சத்தியம் செய்யும்படி வேண்டவில்லை.என்றாலும் என்னிடம் ஜிப்ரீல் வந்து: நிச்சயமாக அல்லாஹ; உங்களைப் பற்றி பெருமையாக மலக்குகளிடம் பேசுகிறான் என்று என்னிடம் அறிவித்தார்கள்.
وَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاكَ؟» قَالُوا: وَاللهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَاكَ، قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ».
அபூ ஸுப்யானின் மகன் முஆவியா ரழியல்லாஹுஅன்ஹுமா அவர்கள் பள்ளியிலே வட்டமாக அமர்ந்திருந்தவர்களை நோக்கிச்சென்று அவர்களை விழித்து எதற்காக அவர்கள் உட்கார்ந்துள்ளார்கள் என வினவினார்கள் அப்பொழுது அவர்கள் அல்லாஹ்வை 'திக்ர்' நினைவு படுத்துகின்றோம் என்றார்கள். அப்பொழுது முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விடத்தில் அமர்ந்து ஒன்றுகூடி இருப்பது அல்லாஹ்வை 'திக்ர்' நினைவு படுத்துவதை தவிர வேறு நோக்கம் தமக்குக் கிடையாது என அல்லாஹ்வின் மிது ஆணையிட்டுக்கூறுமாறு அவர்களை வேண்டினார்கள். அப்பொழுது அவர்கள் அற்காக சத்தியம் செய்தார்கள். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைப் பார்த்து : உங்கள் மீது குற்றம் காண வேண்டும் என்பதற்காகவோ உங்களது உண்மைத் தன்மையில் சந்தேகம் வைத்தோ நான் உங்களை சத்தியம் செய்யும்படி வேண்டவில்லை எனக் கூறினார்கள், பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் தனக்கும் இடையில் உள்ள நெறுக்கமான உறவுமுறையை குறிப்பிடும் போது நபியவர்களுக்கு நான் மிக நெறுக்கமாக இருப்பது போன்று எந்த ஒருவரும் இருந்ததில்லை ஏனெனில் தனது சகோதரி உம்மு ஹபீபா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய அன்பு மனைவியாக இருந்ததினாலும். மேலும் அவர்கள் வஹியை எழுதக்கூடியவர்களில் ஒருவராக இருந்ததினாலுமாகும். அதேவேளை இவர்-முஆவியா ரழியல்லாஹு அன்ஹு நபியவர்களிடமிருந்து மிகக்குறைவான ஹதீஸ்களையே அறிவிப்புச் செய்துள்ளார்கள். அத்தோழர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடய பின்வரும் நிகழ்வை சொன்னார்கள்: ஒரு நாள் தனது வீட்டிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வெளியில் வந்தார்கள். அப்பொழுது சில நபித்தேழர்கள் பள்ளியில் உட்கார்ந்து, தங்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்தின் பால் நேர்வழிகாட்டி அருள்புரிந்தமைக்காக அவனை நினைவு கூறி (திக்ரு செய்து) புகழ்ந்து கொண்டிருக்கும் காட்சியை கண்டதும் அவர்களிடம் இது குறித்து விசாரித்து நபியவர்கள் சத்தியம் செய்யுமாறு கூறினார்கள் அதைப் போன்று முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நடந்து கொண்டார்கள் இவ்வாறு நபியவர்களும் தமது தோழர்களுடன் நடந்து கொண்டமை குறித்து குறிப்பிட்டார்கள். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; தான் அவர்களை விசாரித்து சத்தியம் செய்ய பணித்ததற்குரிய காரணத்தைக் கூறினார்கள்: அதாவது, மலக்கு (களின் தலைவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து தன்னிடம் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களைப் பற்றி பெருமையாக மலக்குகளிடம் பேசுகிறான் உங்கள் சிறப்புக்களை அவர்களிடம் வெளிப்படையாக கூறுகிறான். உங்களது நல்லமல்களை அவர்களுக்கு காண்பிக்கின்றான். அவர்களிடம் உங்களைப்பற்றி புகழ்ந்து கூறுகிறான் என்று என்னிடம் அறிவித்தார்கள்.
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிய சிறப்பும் அறிவை எத்திவைக்கின்ற விடயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களை முன்மாதிரியாகக் கொள்வதில் அவர்களுக்கிருந்த பேரார்வமும்.
ஒரு செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு சந்தேகமில்லாத ஒரு விடயத்தில் சத்தியம் செய்யுமாறு வேண்டுவது அனுமதிக்கப்படும்.
திக்ர் மற்றும் அறிவுடைய சபைகளின் சிறப்பு. இவ்வாறான சபைகளை அல்லாஹ் விரும்புவது மாத்திரமின்றி அது பற்றி மலக்குகளிடம் பெருமையாகப் பேசுகிறான்.
முஸ்லிம் (4/ 2075) (2701).
மேலதிகமாக (5)
نزهة المتقين (2/ 993).
بهجة الناظرين.
لسليم الهلالي (2/ 522).
كنوز رياض الصالحين.
لمجموعة من الباحثين (17/ 271).
நூல்களில் மேற்கோள்
3 நூல்கள்மேலதிகமாக (3)
- الصلاة التي علمها النبي ﷺ الصحابة رضي الله عنهمالصلاة التي علمها النبي ﷺ الصحابة رضي الله عنهمأَنَّ رَسُولَ اللهِ ﷺ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاك
- الصلاة التي علمها النبي ﷺ الصحابة رضي الله عنهمأَنَّ رَسُولَ اللهِ ﷺ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا، قَالَ: «آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَاك
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 7«أمَا إنِّي لم أسْتَحْلفْكُمْ تُهْمةً لَكُمْ، ولكنَّه أتَاني جبريلُ فأخْبَرَني أنَّ الَله يُبَاهي بكُمُ المَلائكَةَ».