Skip to content

நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.

உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:

நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.

قُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا النَّجَاةُ؟ قَالَ: «امْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلَى خَطِيئَتِكَ».

இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
சரியானது
விளக்கவுரை

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் ஈருலக வெற்றிக்கான காரணிகள் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கின்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று விடயங்களைப் பற்றிப் பிடிக்குமாறு கூறுகின்றார்கள் : முதலாவது, நன்மைகளற்ற, கெட்டவார்த்தைகளை விட்டும் உனது நாவைக் காத்துக்கொள். நல்லவற்றைத் தவிர வேறு எதனையும் பேசிவிடாதே! இரண்டாவது, உனது வீட்டில் இருந்து அல்லாஹ்வைத் தனிமையில் வணங்குவாயாக! விட்டிற்குள்ளேயே இருப்பதன் மூலம், குழப்பங்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! மூன்றாவது, நீ செய்த பாவங்களை நினைத்துக் கைசேதப்பட்டு, அழுது பாவமன்னிப்புக் கேட்பாயாக!

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

வெற்றிக்கான வழிகளை அறிவதில் நபித்தோழர்கள் ஆர்வமாக இருந்தமை.

இம்மை, மறுமை வெற்றிக்கான வழிகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளமை.

ஒரு மனிதன், தன்னால் ஏனையோருக்கு பயனளிக்க முடியாது என்று நினைக்கும் பட்சத்தில், அல்லது, மக்களோடு கலக்கும் போது தனது மார்க்கத்திற்கோ, உயிருக்கோ ஆபத்து வரலாம் என நினைக்கும் பட்சத்தில், தனித்துப் போய் தனது விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்தலாம்.

குழப்பங்களில் போது குறிப்பாக வீட்டில் கவனம் செலுத்துவது. மார்க்கத்தைப் பாதுகாக்கும் வழிகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

ஸுனன் திர்மிதீ (4/ 208) (2406).

முஸ்னத் அஹ்மத் (28/ 654) (17452).

மேலதிகமாக (6)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (3/ 15).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمجموعة من الباحثين (2/ 1039).

مرقاة المفاتيح.

لعلي القاري (7/ 3039).