Skip to content

யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும். அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகளை தொழுமிடங்களாக மாற்றிக் கொண்டார்கள்.'

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் :

யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும். அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகளை தொழுமிடங்களாக மாற்றிக் கொண்டார்கள்.' ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அவ்வாறில்லாவிட்டால் அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும். எனினும், அது தொழுமிடமாக மாற்றப்படலாம் எனப் பயப்படப்பட்டது.

«لَعَنَ اللهُ الْيَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» قَالَتْ: فَلَوْلَا ذَاكَ أُبْرِزَ قَبْرُهُ، غَيْرَ أَنَّهُ خُشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا.

இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

இங்கு உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபித்து, தனத அருளை விட்டும் அவர்களைத் தூரப் படுத்தட்டும். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகள் மீது கட்டிடங்கள் கட்டியோ, அவற்றை நோக்கி அல்லது அவற்றிற்கு அருகாமையில் தொழுதோ அவற்றைத் தொழுமிடங்களாக மாற்றிக்கொண்டார்கள்.' பின்பு ஆஇஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபியவர்களது இந்தத் தடையும் எச்சரிக்கையும் இல்லாவிட்டால், மேலும், யூத, கிறஸ்தவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளுக்குச் செய்ததது போன்று, நபியவர்களது கப்ருக்கும் செய்யப்படலாம் என்று நபித்தோழர்கள் பயப்படவும் இல்லையென்றிருந்தால், அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

இது நபியவர்களின் இறுதி உபதேசங்களில் ஒன்றாகும். எனவே, இது எந்தளவு முக்கியமானது என்பதையும், இதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதையும் இது உணர்த்துகின்றது.

மண்ணறைகளைத் தொழுமிடங்களாக எடுத்துக் கொள்ளல், ஜனாஸாத் தொழுகையைத் தவிர, வேறு தொழுகைகளைத் தொழ அவ்விடங்களை நாடிச் செல்லல், போன்றவை கடுமையாகத் தடுக்கப் பட்டுள்ளமை. ஏனெனில், அது மரணித்தவரை மகத்துவப்படுத்தவும், அவரது கப்ரை வலம் வருவது, அதன் முனைகளைத் தொடுவது, அவரது பெயரைக் கூறி அழைப்பது போன்றவற்றிற்கு வழிவகுக்குகின்றது. அவையனைத்தும் இணைவைப்பு மற்றும் அதற்கான வழிமுறைகளில் உள்ளவையாகும்.

ஓரிறைக் கொள்கை மீதான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தீவிர ஆர்வமும், கரிசனையும் வெளிப்படுவதுடன் தனது மண்ணறையானது அளவு கடந்து மகிமைப்படுத்தப்படுவது பற்றிய அவர்களது அச்சமும் இங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அதுவும் இணைவைப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியதாகும்.

அல்லாஹ் நபியவர்களை, அவர்களது கப்ரில் இணைவைப்புச் செயல்கள் செய்யப்படுவதை விட்டும் காத்துள்ளான். எனவே, அவர்களது தோழர்களும், அவர்களுக்கு பின்னால் பின்னால் வருபவர்களுக்கும் அவர்களது கப்ர் வெளிக்காட்டப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும் என உணர்த்தியுள்ளான்.

நபியவர்களது உபதேசத்தை நபித்தோழர்கள் நிறைவேற்றியுள்ளமை. மேலும் அவர்கள் தவ்ஹீதை பேணிப் பாதுகாத்தமை.

யூத, கிறிஸ்தவர்களுக்கு ஒப்பாவதைத் தடுத்தல். கப்ருகள் மீது கட்டுவது அவர்களது வழிமுறையாகும்.

குறித்த மண்ணறை கட்டப்படாவிட்டாலும் கப்ருக்கு பக்கத்தில் தொழுவது அல்லது அதனை நோக்கி தொழுகையில் ஈடுபடுவதும் மண்ணறைகளை பள்ளிவாயில்களாக எடுத்துக்கொள்வதில் உள்ளடங்குகின்றது.

மேற்கோள்கள்

புஹாரி (2/ 102) (1390).

முஸ்லிம் (1/ 376) (529).

மேலதிகமாக (6)

تيسير العلام شرح عمدة الأحكام.

لعبد الله البسام (ص292).

تنبيه الأفهام شرح عمدة الأحكام.

لابن عثيمين (2/ 376).

الإلمام بشرح عمدة الأحكام.

لإسماعيل الأنصاري (1/ 236).