Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 17 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நிச்சயமாக அல்லாஹ் மிக வெட்கமுள்ளவன், தயாள குணம் படைத்தவன், தனது அடியான் தன்னிடம் பிரார்திப்பதற்காக உயர்த்திய கைகளை பதிலளிக்காது வெறுமையாக திருப்பி விடுவதை யிட்டும் வெட்கப்படுகிறான்'.
நம்பகமானது (ஹஸன்) இதனை இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்து லில்லாஹ் ( الحمد لله) என்பதாகும்.
நம்பகமானது (ஹஸன்) இதனை இமாம்களான திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் (ரழி அவர்களின் தாயார் இறந்துவிட்டார். எனவே (அவளுக்காக) வழங்குவதற்கு மிகச் சிறந்த தர்மம் எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தண்ணீர்.' என்றார்கள் எனவே ஸஃத் ஒரு கிணற்றைத் தோண்டி, 'இது ஸஃத்தின் தாய்க்கு' என்றார்.
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக நம்பகமாக மாறியது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
"ஜிஹாதில் மிகவும் சிறந்தது அநியாயக்கார அரசனிடத்தில் நீதியை எடுத்துரைப்பதாகும்".
பிரிதொன்றின் மூலம் நம்பகமாக மாறியது (ஹஸன் லிஹைரிஹி) என்ற தரத்தைப் பெற்றது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நபி (ஸல்) அவர்கள் காலையை அடைந்தால், இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.' மாலையை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் காலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்' மேலும் ஒரு தடவை, 'உன்னிடமே மீள்வோம்.' என்றும் கூறினார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
'நிச்சயமாக அல்லாஹ் என் சமூகத்தாரிடத்தில்; தவறுதலாக ஏற்படக் கூடியதையும் மறதியாக ஏற்படக்கூடியதையும் இன்னும் நிர்பந்தமாக நிகழக்கூடிவற்றையும் எனக்காக மன்னித்து விடுகிறான்'.
இது நம்பகமானது (ஹஸன்) என இமாம் நவவி கூறிியுள்ளார். இதனை இமாம்களான இப்னுமாஜா, பைஹகீ போன்றோர் அறிவித்துள்ளனர்.