Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 45 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் 'திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்' என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக் கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அநியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப் பட்டவனுக்கு அநியாயம் இழைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இழைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது.அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது.அதன் கூசாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'இந்த மார்க்கம் இரவு பகல் சென்றடையும் இடமெல்லாம் சென்றடையும்;. அல்லாஹ் இந்த மார்க்கத்தை நகரத்தில் மற்றும் கிராமத்தில் உள்ள எந்த வீட்டையும் சென்றடையாது விட்டுவிட மாட்டான்.ஆகவே இந்த மார்க்த்தை ஏற்றுக்கொன்றவனை கௌரவப்படுத்துவான் அல்லது இதனை ஏற்றுக்கொள்ளாதவனை இழிவுபடுத்துவான் . அதாவது இஸ்லாத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனை கண்ணியப்படுத்துவான், இஸ்லாத்தை நிராகரித்தவனை இழிவு படுத்துவான். இது குறித்து தமீமுத்தாரி அவர்கள் குறிப்பிடுகையில் நான் இதனை எனது குடும்பத்தவரில் கண்டேன். யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனரோ அவர்களுக்கு பாக்கியமும் கௌரவமும் கண்ணியமும் கிடைத்தது. யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு அவமானமும் இழிவும் ஏற்பட்டது. அவர்கள் ஜிஸ்யா செலுத்துவோராக இருந்தனர்.'
சரியானது இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
ஒரு ஜனாஸா வைக்கப்பட்டு, அதை மனிதர்கள் சுமந்து விட்டால், அது ஸாலிஹான (நல்ல) ஜனாஸாவாக இருந்தால், 'என்னை முற்படுத்துங்கள்' என்று கூறும். அது நல்லதற்றதாக இருந்தால், 'அதற்கேற்பட்ட கேடே! அதை எங்கு கொண்டு செல்கின்றார்கள்?' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்துமே கேட்கும். அதை மனிதன் கேட்டுவிட்டால், மூர்ச்சையடைந்து விடுவான்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் இருப்பது உண்மைதான் எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.