Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 134 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

அறிவிப்பாளர்

எல்லா அறிவிப்பாளர்களையும் காட்டு (61)
நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'ஒரு உண்மையான முஃமின் மற்றவர்களை குறை கூறபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்'.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
'இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்''.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நற்குணங்கள் கொண்டவர்கள், எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்களாகவும், மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களாகவும் உள்ளனர். உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் யார் என்பதை நாம் அறிவோம். 'முதபைஹிகூன்' என்போர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'பெருமையடிப்பவர்கள்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் வுழூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' முஸ்லிமின் அறிவிப்பில்: உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் இரு கைகளையும் கழுவமுன் வுழூ செய்யும் பாத்திரத்தினுள் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அவரின் இருகைகளும் இரவில் எங்கிருந்தது- எதனைத் தொட்டது- என்பது பற்றி அவர் அறியமாட்டார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (என்னிடம்), அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கெட்ட மனிதராகவோ, கெட்ட பேச்சுக்கள் பேசுகின்றவராகவோ இருக்கவில்லை. .அவர்கள் ' உங்களில் நற்பண்புடையவர் உங்களில் மிகவும் சிறந்தவர்'என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உம்மால் முடியாமலே போகட்டும்!' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்