Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 7 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

"கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார். மற்றொரு அறிவிப்பில் ஸுறா கஹ்பின் இறுதி பத்து வசனங்கள் என்று வந்துள்ளது".
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகையை (ஸுறா பாத்திஹாவை) எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் 'அர்ரஹ்மானிர் ரஹீம்' (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் 'மாலி;கி யவ்மித்தீன்;' (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், 'என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்' என்று கூறுவான். மேலும் 'என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்' என்றும் கூறுவான் ) மேலும், அடியான் 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்' (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், 'இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான். அடியான் 'இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வலழ் ழால்லீன்'. (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்களின் வழியுமல்ல வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் 'இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'உங்கள் வீடுகளைக் அடக்கஸ்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள், நிச்சயமாக ஷைதான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டைவிட்டும் விரண்டோடுகின்றான்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (என்னிடம்), அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து அதில் ஊதுவார்கள் பின் அதில், குல் ஹுவல்லா அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவாரகள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் போன்று வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் இரு குல் ஸூராக்களும்) ஆகும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்