Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 9 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் (ரழி அவர்களின் தாயார் இறந்துவிட்டார். எனவே (அவளுக்காக) வழங்குவதற்கு மிகச் சிறந்த தர்மம் எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தண்ணீர்.' என்றார்கள் எனவே ஸஃத் ஒரு கிணற்றைத் தோண்டி, 'இது ஸஃத்தின் தாய்க்கு' என்றார்.
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக நம்பகமாக மாறியது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
'எல்லாம் வல்ல அல்லாஹ் சில மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை வீணடிக்காதீர்கள்; அவன் சில எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவற்றைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறிச்செல்லாதீர்கள்; சில விஷயங்களில் மறதியாக அன்றி,உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் மௌனமாக இருக்கின்றான். ஆகவே அவற்றைக் குறித்து தேட வேண்டாம்.
இது நம்பகமானது (ஹஸன்) என இமாம் நவவி கூறிியுள்ளார். இதனை இமாம் அத்தாரகுத்னீ தனது ஸுனன் நூலிலும், ஏனையோரும் பதிவு செய்துள்ளனர்.
'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும். உறுதியான இரண்டு விடயங்களைப் பொருத்த வரை அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்தவர் சொர்க்கத்தில் நுழைவார், அல்லாஹ்வுக்கு எதையாவது இணைவைத்து இறந்தவர் நரகத்தில் நுழைவார். ஒரு செயலுக்கு நிகரான வெகுமதி என்பது ஒரு நன்மையான காரியத்தை செய்ய உறுதி கொண்ட விடயத்தை, அவனது மனம் உணர்ந்திருந்திருந்ததை, அல்லாஹ் அறிகிறான் எனில் அது அவனுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படும். ஒருவன் தீய செயலைச் செய்தால், அது அவனுக்கு எதிரான தீய செயலாகப் பதிவு செய்யப்படும். யார் ஒரு நற் செயலைப் புரிகிறாரோ அந்த நற்செயலுக்கு அதைப் போன்ற பத்து மடங்கு கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவரின் ஒரு நற்செயலுக்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். மனிதர்களைப் பொறுத்தவரை, இவ்வுலக வாழ்வில் செல்வச் செழிப்பில் இருப்போர்; மறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள். மறுமையில் செழுமையுடன் இருப்போர் உலக வாழ்வில் நெருக்கடியில் இருப்பர். சிலர் உலக வாழ்விலும் மறுமையிலும் நெருக்கடியில் உள்ளனர்; மேலும் சிலர் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் செல்வச் செழிப்பில் உள்ளனர்.'
நம்பகமானது (ஹஸன்) இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'
நம்பகமானது (ஹஸன்) இந்த ஹதீஸை இமாம் பைஹகீ மற்றும் ஏனையோர் இவ்வாறு பதிவு செய்துள்ளனர், மேலும் இதன் ஒரு பகுதி புஹஇடம்பெற்றுள்ளது.
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர், தங்களின் மனைவியரிடம் சிறந்தவர்'.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் தனது வலப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ என்றும் இடப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ என்றும் கூறி, ஸலாம் கொடுப்பார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்