Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 5 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'செயல்கள் ஆறு வகையாகும், மக்கள் நான்கு வகையினர்: அந்த ஆறு விடயங்களில் இரண்டு உறுதியானவை. அவை இரண்டுக்கும் ஒன்றை ஒத்த சமமான வெகுமதி- கூலி- கிடைக்கும். ஒரு நல்ல செயலுக்கு பத்து மடங்கு வெகுமதி-கூலி- கிடைக்கும்,(அதே போன்று) ஒரு நல்ல செயலுக்கு எழுநூறு மடங்கு வெகுமதி கிடைக்கும். உறுதியான இரண்டு விடயங்களைப் பொருத்த வரை அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்தவர் சொர்க்கத்தில் நுழைவார், அல்லாஹ்வுக்கு எதையாவது இணைவைத்து இறந்தவர் நரகத்தில் நுழைவார். ஒரு செயலுக்கு நிகரான வெகுமதி என்பது ஒரு நன்மையான காரியத்தை செய்ய உறுதி கொண்ட விடயத்தை, அவனது மனம் உணர்ந்திருந்திருந்ததை, அல்லாஹ் அறிகிறான் எனில் அது அவனுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படும். ஒருவன் தீய செயலைச் செய்தால், அது அவனுக்கு எதிரான தீய செயலாகப் பதிவு செய்யப்படும். யார் ஒரு நற் செயலைப் புரிகிறாரோ அந்த நற்செயலுக்கு அதைப் போன்ற பத்து மடங்கு கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவரின் ஒரு நற்செயலுக்கு எழுநூறு மடங்கு நன்மை கிடைக்கும். மனிதர்களைப் பொறுத்தவரை, இவ்வுலக வாழ்வில் செல்வச் செழிப்பில் இருப்போர்; மறுமையில் கஷ்டத்தில் இருப்பார்கள். மறுமையில் செழுமையுடன் இருப்போர் உலக வாழ்வில் நெருக்கடியில் இருப்பர். சிலர் உலக வாழ்விலும் மறுமையிலும் நெருக்கடியில் உள்ளனர்; மேலும் சிலர் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் செல்வச் செழிப்பில் உள்ளனர்.'
நம்பகமானது (ஹஸன்) இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
'பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர், தங்களின் மனைவியரிடம் சிறந்தவர்'.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கும் இடையில் 'அல்லாஹும்மஃபிர்லீ வர்ஹம்னீ வஆபினீ வஹ்தினீ வர்ஸுக்னீ' என்று கூறுபவர்களாக இருந்தார்கள்;. பொருள் : யாஅல்லாஹ் ! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்குக் கிருபை செய்வாயாக ,எனக்கு ஆரோக்கியத்தைத் தருவாயாக, எனக்கு நேர்வழி காட்டிடுவாயாக, எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக'.
துணை ஆதாரங்கள் ஊடாக ஆதாரமாகக்கொள்ள முடியுமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.