Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 5 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

'ஒரு நபரின்; (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்று விடுங்கள்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நிச்சயமாக சில குழப்பங்கள் நிகழும். பின்பு ஒரு குழப்பம் நிகழும். அதில் அமர்ந்திருப்பவர், நடந்து செல்பவரை விட சிறந்தவர். அதில் நடந்து செல்பவர், அதற்காக விரைந்து செல்பவரை விடச் சிறந்தவர். அறிந்து கொள்ளுங்கள்! அது இறங்கி விட்டால் அல்லது நிகழ்ந்து விட்டால், யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ, அவர் தனது ஒட்டகங்களுடன் போய் இருந்து கொள்ளட்டும். யாரிடம் ஆட்டு மந்தை இருக்கின்றதோ, அவர் தனது ஆட்டு மந்தையுடன் போய் இணைந்துகொள்ளட்டும். யாரிடம் ஒர நிலப்பூமி இருக்கின்றதோ, அவர் தனது நிலத்தில் போய் இருந்து கொள்ளட்டும். அப்போது ஒரு மனிதர், 'அல்லாஹ்வுடைய தூதரே! ஒட்டகமோ, ஆட்டு மந்தையோ, நிலமோ இல்லாதவர் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?' என்று கேட்ட போது, 'தனது வாளை நோக்கிச் சென்று, அதன் கூரிய பகுதியை ஒரு கல்லால் அடித்து (உடைத்து) விடட்டும். பின்பு, அவரால் தப்பமுடியுமாக இருந்தால், தப்பிக் கொள்ளட்டும். யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா? யா அல்லாஹ்! நான் எத்திவைத்துவிட்டேனா?' என்று கூறினார்கள். அப்போது ஒரு நபித்தோழர், நான் கட்டாயப்படுத்தப்பட்டு, இரு அணிகளில் ஒன்றுக்கோ, அல்லது இரு தரப்பினரில் ஒன்றுக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு மனிதன் என்னை வாளால் வெட்டிவிட்டாலோ, அல்லது ஒரு அம்பு வந்து என்னைக் கொண்டுவிட்டலோ, எனது நிலை என்ன? என்பது பற்றிக் கூறுங்கள் என்று கேட்டபோது, 'உனது பாவமும், அவனது பாவமும் அவனையே சேரும். அவன் நரகவாதிகளில் இருப்பான்' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)' என்று கூறினார்கள். மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?' என்று கேட்டார்கள். 'இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)' என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர அவர்களுடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விடயத்தில் பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சமாட்டோம் என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்