Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 80 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நான், 'அல்லாஹ்வின் தூதரே! வெற்றி எவ்வாறு?' எனக் கேட்டபோது, 'உனது நாவை உன் கட்டுப்பாட்டுள் வைத்துக்கொள்! உனது வீடு உனக்கு விசாலமாக இருக்கட்டும், உன் பாவங்களை நினைத்து அழு' என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆல இம்ரானின் 135 வசனத்தை ஓதிக்காட்டினார்கள் "மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்".
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.