Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 85 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
"அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக்கொண்டால், அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும்." ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "இன்னுமொன்று உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக் கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது" என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வுக்கு எந்த இணையையும் ஏற்படுத்த மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி வழங்குங்கள். மேலும், உங்களது பிள்ளைகளைக் கொலை செய்யமாட்டீர்கள் என்றும், மேலும், உங்கள் கரங்கள் மற்றும் கால்களுக்கு இடையில் இருந்து இட்டுக்கட்டி, அவதூறுகளைக் கொண்டு வரமாட்டீர்கள் என்றும், நன்மையில் மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் (எனக்கு உறுதிமொழி வழங்குங்கள்) உங்களில் யார் (இதை) நிறைவேற்றுகின்றாரோ, அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றை யாராவது செய்து, பின்பு அல்லாஹ் அவரை மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளவர். அல்லாஹ் நாடினால், அவரை மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான். (இவ்வாறு நபியவர்கள் கூறிய பின்னர்) நாம் அதற்கு உறுதிமொழி வழங்கினோம்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை விரும்புகின்றீர்களா?' என்று கேட்பான். அப்போது அவர்கள், 'நீ எங்களது முகங்களை பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவர்களுக்கு அல்லாஹ்வைப் பார்ப்பதை விட, விருப்பமான வேறொன்றும் வழங்கப்பட்டிருக்கமாட்டாது.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
சரியானது இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது
யா அல்லாஹ்! உனது அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதை விட்டும், உனது சோதனைகள் திடீரென வருவதை விட்டும், உனது அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால், அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்றிருந்தால் அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'.
சரியானது ஹதீஸ் கலை இமாம்களான புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்துள்ளனர். இவர்களின் இவ்விரு புத்தகங்களும் மிகவும் சரியான தரத்தில் அமைந்த புத்தகங்களாகும்.
'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும். முஸ்லிம் அவர்களது அறிவிப்பில், 'அல்லாஹ்வை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், நினைவு கூறப்படாத வீட்டிற்கும் உதாரணம் உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்.' என்று உள்ளது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உங்களில் எவரும் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே தவிர மரணிக்கவேண்டாம்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்