Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 85 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காயம் காணப்பட்டது. அவர் பொறுக்கமுடியாது, ஒரு கத்தியை எடுத்து, தனது கையை வெட்டிவிடவே, இரத்தம் பெருக் கெடுத்தோடி அவர் மரணித்துவிட்டார். அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்று கூறினான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
முஃமினுக்காக- இறைவிசுவாசிக்காக சுவர்க்கத்தில் உள்ளிருந்து வெறுமையாக இருக்கும் ஒரு முத்திலான கூடாரமொன்று இருக்கும். அதன் நீளம் முப்பது மைல் தொலைவைக் கொண்டதாகும். அதிலே இறைநம்பிக்கையாளருக்கான துணைவியர் இருப்பர். அவர்களிடம் அவர் சென்று வருவார். ஆனால் அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காயம் குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், பாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், ''நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும்போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்' என்று சொன்னார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல் லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். (பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்றும் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.