Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 12 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு

பதிவாகிய நூல்

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
சரியானது இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்
'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அதிகம் செல்வமுள்ளவர்கள் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துச் சென்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு நோற்பது போலவே நோன்பு அவர்களும் நோற்கிறார்கள் இன்னும் அவர்கள் தங்களது தேவைக்கு மிகுதியாக உள்ள செல்வத்திலிருந்து தர்மமும் செய்கிறார்கள். அதற்கு இறைத்தூதர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் : "அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா. அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் இச்சையை நிறைவு செய்ய வருகிறார் அதற்கும் அவருக்கு நற்கூலி உண்டா ? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 'அதனை ஹராமான வழியில் தீர்த்தால் அவருக்கு பாவமுண்டென கருதுகின்றீர்களா? அவ்வாறே அதனை ஹலாலான முறையில் தீர்த்துக்கொண்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு.' " என்றார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விடயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என்னுடன் -வருத்தப்படக்- கோபப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உமதும்; உமக்கு முன்பிருந்தோரினதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன் அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன் அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ரின் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.