Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 72 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'யார் ஒரு கடமையான தொழுகையை நிறைவேற்ற மறந்துவிடுகிறாரோ அவர் அதனை ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும்; அதற்கான குற்றப்பரிகாரம் அதனைத்தவிர வேறுஒன்றுமில்லை (என்னை நினைவு படுத்த தொழுகையை நிலைநாட்டுவீராக,) (தாஹா :14)
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்பவர், ஒரு மாட்டை 'குர்பானி' கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியை –மஸ்ஜிதுன் நபவியை- மீள் நிர்மாணிக்க –புணரமைக்க- நாடியபோது அதனை மக்கள் விரும்பவில்லை, அதனை நபியவர்களின் காலத்தில் இருந்த அமைப்பில் இருப்பதை விரும்பினார்கள். அப்போது அவர்கள் 'யார் அல்லாஹ்வுக்காக பள்ளியை கட்டுகிறாரோ அதனைப்போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவனுக்காக கட்டுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாகக் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
எழுது கோள் மூவரை விட்டும் உயர்தப்படுகிறது: (மூவரின் செயல்கள் பதியப்படுவதில்லை) தூங்குபவர் விழித்தெழும்வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை, புத்திசுவாதின மற்றவர் அவரின் புத்தி தெளியும் வரை.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றால்,சீட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், அவர்கள் சீட்டுப் போடுவார்கள். தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்வதன் சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், அதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். மேலும், இஷாத் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், தவன்றாவது அதற்கு வருவார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள்; படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
சில மனிதர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மிம்பர்-பிரசங்க மேடை எதனால் அமைக்கப்பட்டது என்ற வாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அது பற்றி வினவினர். அதற்கு ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மின்பர் மேடை எதனால் அமைக்கப்பட்டது என்பது குறித்து நான் அறிவேன். அதே போன்று அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதனைப் பார்த்ததுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதில் அமர்வதை நான் கண்டேன். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணிடம் - அன்ஸாரிப் பெண்களில் ஒருவரான ஸஹ்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகின்ற பெண்ணிடம்- 'தச்சு வேலை செய்யும் உன்னுடைய அடிமையிடம் நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்து கொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச் சொல்' என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் தம் அடிமையிடம் இதைக் கூறினார். அந்த அடிமை ஃகாபா எனும் பகுதியில் உள்ள மரத்தில் அதைச் செய்து வந்தார். அப்பெண் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கொடுத்தனுப்பினார். அதை தற்போது இருக்கும் இந்த இடத்தில் வைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள், பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி அதன் மீது தொழுததையும், அதன் மேல் இருந்தபோது தக்பீர் - ஆரம்ப தக்பீர் - கூறுவதையும் நான் பார்த்தேன்; பின்னர் அவர் அதன் மேல் இருந்தவாறு குனிந்து ருகூஉ செய்தார்கள், பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பரின் அடிப்பகுதியில் ஸஜ்தா செய்ததன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி: மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.