Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 72 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக 'தக்பீர்' கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோல்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து எழும்போது) 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவிலிருந்து எழும்போதோ) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'
சரியானது இமாம்களான திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
'உணவு சாப்பிடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எமக்கு ஸுப்ஹ் தொழுவித்ததுவிட்டு 'இன்னார் தொழுகைக்கு வந்துள்ளாரா? என்று கேட்டார்கள் அப்போது ஸஹாபாக்கள் இல்லை என்று கூற, மீண்டும் 'இன்னார் வந்துள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று கூறவே "'பஜ்ர் மற்றும் இஷா ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகனுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். அவை இரண்டிற்கும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களேயானால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.தொழுகையின் முன் வரிசை மலக்குமார்களின் வரிசையைப்போன்றதாகும். இதன் சிறப்பை அவர்கள் அறிவார்காளானால் விரைந்து வருவார்கள். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது தனித்து தொழுவதைவிடவும் மிகவும் சிறப்பானது. ஒருவர் இரண்டு நபரகளுடன் கூட்டாக தொழுவது ஒருவருடன் கூட்டாகத் தொழுவதைவிட சிறப்புக்குரியது. கூட்டுத் தொழுகையில் எவ்வளவு அதிகமாக மக்கள் கலந்து கொள்கிறார்களோ அது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது.
சரியானது இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு, அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது என்று கூறுபவர்களாக இருந்தார்கள்' (யாஅல்லாஹ்! எங்கள் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமி நிரம்பும் அளவுக்கும்; நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் உனக்கே புகழனைத்தும்.)
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு) ' அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' பொருள் : (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும்-தொழுகைகளும்- பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). புஹாரி முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில்' நிச்சயமாக அல்லாஹ் ' அஸ்ஸலாம் ஆவான்' உங்களில் ஒருவர் தொழுகையில் இறுதி அமர்வில் அமர்ந்தால் 'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று கூறட்டும். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்'.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
'உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்'.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்