Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 39 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது; 'அவர் தனது ஆண்குறியைக்(ஆணுறுப்பை) கழுவிவிட்டு வுழு செய்யட்டும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரியின் அறிவிப்பில்' 'நீ உன்னுடைய ஆண்குறியைக் கழுவிவிட்டு வுழுச் செய்து கொள்' என்று இடம்பெற்றுள்ளது.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியே வந்ததும், 'குஃப்ரானுக்' «غُفْرَانَكَ (யா அல்லாஹ், நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்'
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை ஒவ்வெரு தடவையும் கழுவுபராக இருந்தார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு தடவைகள் கழுவட்டும்'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.