Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 16 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்றும் கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து அதில் ஊதுவார்கள் பின் அதில், குல் ஹுவல்லா அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவாரகள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
சரியானது இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
நான் அபூ தல்ஹாவின் வீட்டில் மக்களுக்கு (மது) புகட்டுபவனாக இருந்தேன். அந்நாட்களில் அவர்களது மதுபானம் என்பது, 'பழீக்' எனப்படும் (ஈத்தம் பழத்தால் செய்யப்படும்) மதுவாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஓர் அழைப்பாளியை ஏவி, 'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.' என்று அறிவிக்கச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா என்னிடம், 'வெளியே சென்று, இதைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நானும் வெளியேறி அதைக் கொட்டினேன். அது மதீனாவின் பாதைகளில் ஓடியது. அப்போது மக்களில் சிலர், 'சில மனிதர்கள், மது தம்முடைய வயிற்றில் இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனரே' என்று கூறிய போது, "ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப் பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது (அல் மாஇதா : 93) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'
சரியானது இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் உரை நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் கூறினார்: ''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய பெருமைகொள்வதையும் நீக்கிவிட்டான். ஆகவே தற்போது இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: அல்லாஹ்வின் பார்வையில் நேர்மையான, பக்தியுள்ள மற்றும் கண்ணியமான நபர். அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பொல்லாத, பரிதாபத்திற்குரிய, அற்பமான மனிதர். மக்கள் ஆதமின் பிள்ளைகளாவர், அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன். (ஹுஜுராத் : 13).
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் இப்னு ஹிப்பான் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டது
எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் போன்று வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் இரு குல் ஸூராக்களும்) ஆகும்.
சரியானது இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்