ரமழானின் இறுதிப்பத்தில ஒற்றைப்படையான இரவுகளில்; 'லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ரமழானின் இறுதிப்பத்தில ஒற்றைப்படையான இரவுகளில்; 'லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்.
«تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ».
ரமழானில் இறுதிப்பத்துகளில் நற்செயல்களை அதிகம் செய்வதன் மூலம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு பாடுபடுமாறும் சிறப்பு கவனம் செலுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் மக்களை ஊக்குவித்துள்ளார்கள். இந்த இரவு ஒவ்வொரு ஆண்டும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் 21, 23, 25, 27 மற்றும் 29 போன்ற ஒற்றைப் படையான இரவுகளில் வருவதற்கான வாய்ப்பு மிகவும் உள்ளது.
லைலத்துல் கத்ரின் மகத்துவமும்; அதைத் தேட மக்களை ஊக்கப்படுத்தியுள்ளமையும்.
லைலத்துல் கத்ர் இரவை தேடி, மக்கள் வணக்க வழிபாடுகளில் ஆழ்ந்து ஈடுபட்டு தங்களது நன்மைகளை அதிகரித்துக்கொள்ளவதற்காக அந்த புனிதமிகு இரவை மறைத்து வைத்துள்ளான். இது அல்லாஹ்வின் ஞானம் மற்றும் கருணை சார்ந்த விடயமாகும்.
லைலத்துல் கத்ர் ரமழானின் கடைசி பத்து இரவுகளில், ஒற்றைப்படை இரவுகளில் (21, 23, 25, 27 மற்றும் 29ல்;) நிகழ்வதற்கு பெரும் வாய்ப்புள்ளது.
லைலத்துல் கத்ர் என்பது ரமழானின் கடைசி பத்து இரவுகளில் ஒன்றாகும். இந்த இரவில்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான்;. இந்த இரவானது அது கொண்டிருக்கும் பரக்கத்தினாலும், மிகப்பெரும் கண்ணியத்தினாலும், அதில் செய்யப்படும் நற்காரியங்களின் விளைவாலும் ஆயிரம் மாதங்களை விட மிகவும் சிறந்ததாகும்.
இந்த இரவானது 'கண்ணியமிக்க இரவு' (லைலத்துல் கத்ர்) என்ற பெயரால் அழைக்கப்படுவதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ' 1. கத்ர் என்ற சொல்லுக்கான கருத்து 'மதிப்பு, கௌரவம் என்ற அடிப்படையிலாகும் 'கத்ர்' என்ற சொல்லை அறபு மொழியில் உயர்திணையுடன் பாவிக்கும் 'மரியாதை', 'கௌரவம்', 'அந்தஸ்து'. என்ற கருத்தில் பாவிப்பர் அறபு மொழியில் 'புலானுன் அழீமுல் கத்ரி' என்று கூறுவர் அதன் கருத்து 'சிறந்த அந்தஸ்தில் இருப்பவர் 'சிறந்த அந்தஸ்து உள்ளவர்' என்று கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் கத்ர் என்ற சொல்லை அடைமொழியாக பாவிப்பவர் அந்த வகையில் இங்கே லைலத்துல் கத்ர் என்பது என்றால் 'கௌரவமான இரவு', 'மதிப்புமிக்க இரவு' என்று பொருளாகும். அல்குர்ஆன் இதனை பின்வருமாறு விவரிக்கிறது : "நாம் அதை (குர்ஆனை) ஒரு புனிதமிகு இரவில் இறக்கினோம்". (சூறத்துத் துஹான்: 3) 2. லைலத்துல் கத்ர் என்பது தக்தீர் என்ற கருத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டிருக்க முடியும். அந்த வகையில் 'கத்ர்' என்பதற்கு ஆணை, கட்டளை விதி, முடிவு முதலான கருத்துக்கள் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்கொள்வோமாயின் இறைவிதி தீர்மானிக்கப்படும் இரவு அதாவது எதிர்வரும் ஆண்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தீர்மானிக்கப்படும் இரவு என்பதாகும். இதற்கான ஆதாரமாக பின்வரும் வசனம் உள்ளது 'அந்த இரவில், ஒவ்வொரு அறிவு விஷயமும் தீர்மானிக்கப்படுகிறது' (சூறத்துத் துஹான்).
புஹாரி (3/ 46) (2017).
முஸ்லிம் (2/ 828) (1169).
மேலதிகமாக (4)
تيسير العلام.
لعبد الله البسام (ص347).
تنبيه الأفهام شرح عمدة الأحكام.
لابن عثيمين (3/ 470).
நூல்களில் மேற்கோள்
4 நூல்கள்மேலதிகமாக (4)
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 6«تَحَرَّوا ليلةَ القَدْرِ في الوِتْرِ من العَشْرِ الأوَاخرِ من رَمَضَانَ».
- مجموعة زاد الفقه (3)الفقه 3«تحرَّوا ليلةَ القدرِ في الوِترِ من العَشْرِ الأواخِرِ»
- نصوص مختارة للرمضانتَحَرَّوْا ليلة القَدْر في الوِتْرِ من الْعَشْرِ الأوَاخِرِ
- نصوص مختارة للرمضانتَحَرَّوْا ليلة القَدْر في الوِتْرِ من الْعَشْرِ الأوَاخِرِ