Skip to content

ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :

ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்.

«مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً، فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ».

இதனை அபூதாவுத், திர்மிதீ ஆகியோரும் குப்ராவில் நஸாஈ அவர்களும் பதிவு செய்துள்ளனர்.
சரியானது
விளக்கவுரை

நபி ﷺ அவர்கள், அல்லாஹ்வை நினைவு கூறுவதில்; அதாவது திக்ர் செய்வதில அலட்சியமாக இருப்பதைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். எந்தக் குழுவினர் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, அதில் அல்லாஹ்வை நினைவுகூராமலும், அவனுடைய தூதர் ﷺ மீது ஸலவாத்தும் சொல்லாமலும்; இருந்தார்களோ, அந்தக் மஜ்லிஸானது கியாமத் நாளில் அவர்களுக்கு பேரிழப்பாகவும், வருத்தம் நிறைந்தாகவும், கைசேதமாகவும் குறைபாடுடையதாகவும் மாறிவிடும். அல்லாஹ் நாடினால், அவர்களின் முந்தைய பாவங்களுக்காகவும் பின்னர் செய்த தவறுகளுக்காவும் அவர்களைத் தண்டிப்பான். அவன் நாடினால், தன் அருளாலும் கருணையாலும் அவர்களை மன்னிப்பான்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

அல்லாஹ்வை நினைவு கூர (திக்ர் செய்ய) ஊக்குவித்தலும், அதன் மகத்துவமும்.

அல்லாஹ்வை நினைவு (திக்ர் செய்து) கூறி அவனது தூதர் ﷺ மீது ஸலவாத்து கூறும் சபைகளின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். மேலும் இவை இல்லாத சபைகள் (கூட்டங்கள்), கியாமத் நாளில் அவற்றில் கலந்து கொண்டவர்களுக்கு துரதிஷ்திடத்தை ஏற்படுத்தும் கூட்டங்களாக அமைந்துவிடும்.

அல்லாஹ்வை நினைவு கூர்வதில் அலட்சியம் செய்வதைப் பற்றிய இந்த எச்சரிக்கை, சன்மார்க்க கூட்டங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அது ஏனையை சபைகள் மற்றும் கூட்டங்களையும்; உள்ளடக்குகிறது. இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்: 'ஒரு இடத்தில் அமரும் ஒருவர், அந்த இடத்தை விட்டு செல்லும் முன் அல்லாஹ்வை நினைவுகூராமல் எழுந்து செல்லுவது வெறுக்கத் தக்கதாகும் (மக்ரூஹ்)'.

மறுமையில் அவர்களுக்கு ஏற்படும் கைசேதத்திற்கான காரணம் ஒன்றில், அந்த நேரத்தை இறைவழிபாட்டில் பயன் படுத்தாமையினால் தப்பிப் போன நன்மைகளை நினைத்தாகவோ, அல்லது அல்லாஹ்வுக்கு மாறுசெய்து நேரத்தை வீணடித்தமையினால் பாவங்கள் கிடைத்தமையினாலோ ஆக இருக்கலாம்.)

அனுமதிக்கப்பட்டவற்றின் மூலம் இவ்வாறான பராமுகம் ஏற்படுவதற்கே இந்த எச்சரிக்கை என்றால், புறம், கோல் போன்ற தடுக்கப்பட்டவற்றை உள்ளடக்கியிருக்கும் சபைகளின் நிலை என்ன?

மேற்கோள்கள்

ஸுனன் அபூ தாவூத் (7/ 221) (4855).

ஸுனன் திர்மிதீ (5/ 391) (3380).

இமாம் நஸாஈயின் ஸுனனுல் குப்ரா (9/ 155) (10163).

மேலதிகமாக (6)

توضيح الأحكام من بلوغ المرام.

لعبد الله البسام (7/ 524).

منحة العلام في شرح بلوغ المرام.

لعبد الله الفوزان (10/ 396).

فتح ذي الجلال والإكرام.

لابن عثيمين (6/ 464).