நீங்கள் காற்றை தூற்றாதீர்கள். அவ்வாறு நீங்கள் அதில் விரும்பாதவற்றை கண்டால் ' அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வகைர மாபீஹா வகைர மா உமிரத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரி ஹதிஹிர்ரீஹீ வஷர்ரி மா பீஹா வஷர்ரி மா உமிரத் பிஹி பிஹி 'என்று கூறுங்கள். பொருள் : யாஅல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும், அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் இது எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறோம். இதன் தீங்கை விட்டும், அது மறைத்து வைத்துள்ள தீங்கைவிட்டும் அது எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்'.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உபையி இப்னு கஃப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நீங்கள் காற்றை தூற்றாதீர்கள். அவ்வாறு நீங்கள் அதில் விரும்பாதவற்றை கண்டால் ' அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹிர் ரீஹி வகைர மாபீஹா வகைர மா உமிரத் பிஹி. வஅவூது பிக மின் ஷர்ரி ஹதிஹிர்ரீஹீ வஷர்ரி மா பீஹா வஷர்ரி மா உமிரத் பிஹி பிஹி 'என்று கூறுங்கள். பொருள் : யாஅல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையையும், அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் இது எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறோம். இதன் தீங்கை விட்டும், அது மறைத்து வைத்துள்ள தீங்கைவிட்டும் அது எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்'.
«لاَ تَسُبُّوا الرِّيحَ، فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ».
நபி ﷺ அவர்கள் காற்றை (ரீஹ்) திட்டுவதையும், சபிப்பதையும் தடை செய்தார்கள். ஏனெனில் காற்று அதன் படைப்பாளானாகிய அல்லாஹுத் தஆலாவின் ஆணைக்குட்பட்டது. அது சில நேரங்களில் அருளுடன் வருகிறது. சில நேரங்களில் தண்டனையுடனும் வருகிறது. காற்றை திட்டுவது அதன் படைப்பாளனாகிய அல்லாஹ்வைத் திட்டுவதற்கு நிகரானதாகும். மேலும் அது அல்லாஹ்வின் தீர்ப்பை (கதர்) ஏற்க மறுக்கும் மனநிலையைக் காட்டுகிறது. அதன்பின் நபி ﷺ அவர்கள், காற்றின் படைப்பாளனாகிய அல்லாஹுத் தஆலாவிடம் மீண்டு, அதன் நன்மையையும், அதில் உள்ள நன்மையையும், அது அனுப்பப்பட்ட நன்மைகளையும்—மழை வருதல், மகரந்தச் சேர்க்கை போன்றவற்றையும்—கேட்க வேண்டும் என்றும், அதன் தீமைகளிலிருந்தும், அதில் உள்ள தீமைகளிலிருந்தும், அது கொண்டு வரும் தீமைகளிலிருந்தும் அதாவது பயிர்கள் மற்றும் மரங்கள் அழிவது, கால் நடைகள் இறப்பது, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்றவற்றிலிருந்து—அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்க வேண்டும் என்றும் வழிகாட்டினார்கள். இவ்வாறு அல்லாஹ்விடம் வேண்டுவதானது அவனுக்கான உண்மையான அடிமைத்துவத்தை நிரூபிக்கிறது.
காற்றை திட்டுவதும் சபிப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது ஏனெனில் அது அல்லாஹ்வின் ஆளுகைக்கும் திட்டமிடலுக்கும் உட்பட்ட ஒரு படைப்பாகும். எனவே அதனை ஏசுவது அவனை திட்டுவதாக ஏசுவதாக அமைந்து விடுகிறது. இது தௌஹீதின் குறைபாடாகும்.
அல்லாஹ் படைத்தவற்றின் தீமைகளிலிருந்து அவனிடமே பாதுகாப்புக் கோரி அவனிடமே மீள வேண்டும்.
காற்று சில நேரங்களில் நன்மை ஏற்படுத்தவும், சில நேரங்களில் தீங்கை விளைவிக்கவும் அனுப்பப்படுகிறது.
இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: காற்றை திட்டுவது பாவங்களில் ஒன்றாகும்; ஏனெனில் அது அல்லாஹ்வின் படைப்பு மற்றும் அவனது ஆளுகைக்குட்பட்டது. அது நன்மையுடனும் தீமையுடனும் அனுப்பப்படுகிறது. ஆகவே, 'காற்றுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக காற்றை அல்லாஹ் அழிக்கட்டும்', 'இந்தக் காற்றில் பரகத் செய்யாதிருக்கட்டும்' போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. மாறாக, நபி ﷺ அவர்கள் வழிகாட்டியதைப் போலவே ஒரு முஃமின் நடந்து கொள்ள வேண்டும்
காற்றைப் போலவே, வெப்பம், குளிர், சூரியன், தூசி போன்ற—அல்லாஹ்வின் படைப்புகளும் அவரது நிர்வாகத்திற்குட்பட்டவைகளுமான—எல்லாவற்றையும் திட்டுவதும் சபிப்பதும் தடை செய்யப்பட்டதாகும்.
ஸுனன் திர்மிதீ (4/ 103) (2252).
மேலதிகமாக (6)
الجديد في شرح كتاب التوحيد.
لمحمد القرعاوي (ص426).
الملخص في شرح كتاب التوحيد.
لصالح الفوزان (ص382).
القول المفيد على كتاب التوحيد.
لابن عثيمين (2/ 379).
நூல்களில் மேற்கோள்
2 நூல்கள்மேலதிகமாக (2)
- التوحيد في ضوء عقيدة الإمام الشافعي رحمه الله ونصوصه ومروياته"لا تسبوا الريح، فإذا رأيتم ما تكرهون فقولوا: اللهم إنا نسألك من خير هذه الريح وخير ما فيها، وخير ما أمرت به، ونعوذ بك من شر هذه الريح، وشر ما فيها، وشر ما أمرت به".([201])
- رياض الصالحينرياض الصالحين مع فوائد وهدايات - 8«لاَ تَسبُّوا الرِّيحَ، فَإذَا رَأَيْتُمْ مَا تكْرَهُونَ فَقُولُوا: اللهم إنَّا نَسْألُكَ مِنْ خَيْرِ هذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَنَعُوذُ بِكَ مِن شَرِّ هذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِ