Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 42 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூ தாவூத், திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் காலையை அடைந்தால், இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.' மாலையை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் காலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்' மேலும் ஒரு தடவை, 'உன்னிடமே மீள்வோம்.' என்றும் கூறினார்கள்.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'.
சரியானது இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
உங்களது சொத்துக்கள், உயிர்கள், நாவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இணைவைப்பாளர்களுக்கு எதிராகப் போரிடுங்கள்.
சரியானது இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.
சரியானது இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இடது கையில் பட்டையும், வலது கையில் தங்கத்தையும் எடுத்து, இரு கைகளையும் உயர்த்தி, 'இந்த இரண்டும் என் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன, பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்கள்”.
சரியானது இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
நபியவர்கள் எனது கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : முஆதே! நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், 'அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக' (யா அல்லாஹ்! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றிசெலுத்தவும், அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு நீ உதவுவாயாக) என்று கூறுவதை விட்டுவிட வேண்டாம். என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.'
சரியானது இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கூட்டதினர் சபையில் அமர்ந்து அதில் அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூறாமலும், தங்களுடைய நபியின் மீது ஸலவாத்து கூறாமலும் இருப்பார்களாயின் அதுவே அவர்களுக்கு (மறுமையில்) பேரிழப்பாக அமைந்துவிடும். அவன் நாடினால் அவர்களை அவன் தண்டித்து விடுவான் அவன் நாடினால் அவர்களை மன்னித்து விடுவான்.
சரியானது இதனை அபூதாவுத், திர்மிதீ ஆகியோரும் குப்ராவில் நஸாஈ அவர்களும் பதிவு செய்துள்ளனர்.