Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 42 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.'
சரியானது இதனை இமாம் நஸாஈ குப்ராவில் பதிவு செய்துள்ளார்
"யார், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் பில் அர்ழி வலா பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம் (எவனுடைய பெயர் இருக்கும் போது, இவ்வானத்திலோ, பூமியிலோ எந்தவொன்றும் தீங்கை ஏற்படுத்தமாட்டாதோ, அந்த அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (காலையை, மாலையை அடைகின்றேன்) அவன் செவிமடுப்பவனாகவும், அறிந்துள்ளவனாகவும் இருக்கின்றான்) என்று மூன்று தடவை கூறுகின்றாரோ, அவர் காலையை அடையும் வரை, அவருக்கு எந்த திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது. யார் காலையை அடையும் போது அவ்வாறு கூறுகின்றாரோ, அவர் மாலையை அடையும் வரை எந்தத் திடீர் சோதனைகளும் ஏற்படமாட்டாது." அபான் இப்னு உஸ்மானுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இந்த ஹதீஸை அவரிடமிருந்து கற்ற மனிதர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?' அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை. எனினும், எனக்கு இந்த நோய் ஏற்பட்ட தினம், நான் கோபத்தில் இருந்ததால், எனக்கு இதைக் கூற மறந்துவிட்டது.' என்று கூறினார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, -ஒருவிடயத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி- எம்மில் ஒருவருக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன - அவர் அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருக்க விரும்புகிறார்', அப்போது நபியவர்கள் 'அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்".
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்.
'மக்கள் ஒரு அநியாக்காரணைக் கண்டும் அவனை தடுக்காதிருந்தால் விரைவில் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்குவான்.'
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்.
எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'
சரியானது இமாம்களான திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எமக்கு ஸுப்ஹ் தொழுவித்ததுவிட்டு 'இன்னார் தொழுகைக்கு வந்துள்ளாரா? என்று கேட்டார்கள் அப்போது ஸஹாபாக்கள் இல்லை என்று கூற, மீண்டும் 'இன்னார் வந்துள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று கூறவே "'பஜ்ர் மற்றும் இஷா ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகனுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். அவை இரண்டிற்கும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களேயானால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.தொழுகையின் முன் வரிசை மலக்குமார்களின் வரிசையைப்போன்றதாகும். இதன் சிறப்பை அவர்கள் அறிவார்காளானால் விரைந்து வருவார்கள். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது தனித்து தொழுவதைவிடவும் மிகவும் சிறப்பானது. ஒருவர் இரண்டு நபரகளுடன் கூட்டாக தொழுவது ஒருவருடன் கூட்டாகத் தொழுவதைவிட சிறப்புக்குரியது. கூட்டுத் தொழுகையில் எவ்வளவு அதிகமாக மக்கள் கலந்து கொள்கிறார்களோ அது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது.
சரியானது இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.