Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 3 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பார்த்து, “நபிமார்களையும் இறைத்தூதர்களையும் தவிர ஆரம்பமாகவும் இறுதியாகவும் வந்த அனைத்து வயதானவர்களுக்கும் சொர்க்கத்தில் இவர்களே தலைவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.
சரியானது இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்
அதானுக்கும், இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் துஆ தட்டப்படமாட்டாது.
சரியானது இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமாக ' யா முகல்லிபல் குலூப் ஸப்பித் கல்பி அலா தீனிக '- (பொருள்) உள்ளங்களை புரட்டுபவனே! என்னுடைய உள்ளத்தினை உனது மார்க்கத்தில் நிலைத்து இருக்க வைப்பாயாக' என அதிகம் கூறுபவர்களாக இருந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாம் உம்மையும் நீங்கள் கொண்டுவந்தவற்றையும் விசுவாசம் கொண்டுள்ளோம். அவ்வாறிருந்தும் எம்மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள், ஆம் என்று கூறிவிட்டு, 'நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்' என பதிலளித்தார்கள்.
சரியானது இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது