Skip to content
617 ஹதீஸ்கள்

நபிமொழி ஹதீஸ்களின் கலைக்களஞ்சியம்

முடிவுகளை வடிகட்டு

617 இல் 57 அட்டைகள்

வடிகட்டிகளை நீக்கு
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு குத்பதுல் ஹாஜாவை இவ்வாறு கற்றுக் கொடுத்தார்கள் : 'இன்னல் ஹம்த லில்லாஹ், நஸ்தஈனுஹூ வனஸ்தஃபிருஹூ, வனஊது பிஹீ மின் ஷுரூரி அன்புஸினா, மன் யஹ்தில்லாஹு பலா முழில்லலஹூ, வமன் யுழ்லில் பலா ஹாதிய லஹூ, வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'' (பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன! நாம் அவனைப் புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். இன்னும் அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். மேலும் நமது உள்ளங்களில் தோன்றும் தீய எண்ணங்களை விட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழிப்படுத்தி விட்டானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் யாரை வழி கெடுத்து விட்டானோ அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனது நல்லடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள்; பின்வரும் மூன்று வசனங்களை ஓதுவார்கள் : 'மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும், மேலும் இரத்த உறவுகளைத் துண்டித்து நடப்பதையும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்' (நிஸா : 01), 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்' (ஆல இம்ரான் : 102), 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான வார்த்தையையே கூறுங்கள்;, (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்குவான், மேலும்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டுவிட்டார்;' (அஹ்ஸாப் : 70, 71).
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டு, 'அது அறிவு மறையும் நேரத்தில் நிகழும்;' என்று கூறினார்கள். அதற்கு நான் 'அல்லாஹ்வின் தூதரே, நாம் குர்ஆனை ஓதி அதை நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறோம் எமது குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்கு மறுமை நாள் வரை இவ்வாறு கற்றுக்கொடுப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது அறிவு எப்படி மறைந்துவிடும், என்று கூறினேன் அதற்க நபியவர்கள்;: 'ஓ ஸியாதே, (உன்னை உனது தாய் இழப்பதால் கவளைக்கொள்ளாதிருக்கட்டும்) (மதீனாவில் நீ மிகவும் அறிவாளி என்று நான் நினைத்தேன். இந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தவ்ராத் மற்றும் இன்ஜீலைப் படிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதில் உள்ளவற்றை செயல்படுத்தவில்லையல்லவா?!
வேறொரு அறிவிப்புடன் இணைந்து சரியாகியது இதனை இமாம் இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்
'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'.
நம்பகமானது (ஹஸன்) இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
அதற்கு நபியவர்கள் 'உலக வாழ்க்கையில் பற்றற்றவராக இருங்கள், அல்லாஹ் உம்மை நேசிப்பான். மக்களிடம் இருப்பவற்றில் ஆசைகொள்ளாதீர்கள், அவர்கள் உம்மை நேசிப்பார்கள்.' எனப்பதிலளித்தார்கள்.
இது நம்பகமானது (ஹஸன்) என இமாம் நவவி கூறிியுள்ளார். இதனை இமாம் இப்னுமாஜா உட்பட பிறரும் ஹஸனான அறிவிப்பாளர் தொடர்களுடன் பதிவு செய்துள்ளனர்.
இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).
சரியானது இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்வுடைய தூதரே! நாம் கடல் பயணம் செய்கின்றோம். அப்போது, எம்முடன் சொற்பமான அளவு நீரையே சுமந்து செல்கின்றோம். அதைக் கொண்டு நாம் வுழூ செய்துவிட்டால், தாகித்துவிடுவோம். கடல் நீரால் நாம் வுழூ செய்யலாமா?' என்று கேட்டார். அப்போது நபியவர்கள், 'அதன் நீர் பரிசுத்தமானது, அதில் இறப்பவைகளும் ஹலாலானவையே' என்று கூறினார்கள்.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.
நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள், நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சமீபமாகச் சென்றுவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள். இதை யாருக்கெல்லாம் அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அது அவர்களுக்க இலகுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை -அவனுக்கு எந்த இணையும் கற்பிக்காத நிலையில் - வணங்க வேண்டும். மேலும், தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தைக்கொடுக்கவேண்டும். ரமழானில் நோன்பு நோற்கவேண்டும். கஃபாவை ஹஜ் செய்யவேண்டும்.' என்று கூறிவிட்டு, 'நன்மையின் வாயில்களை உனக்கு அறிவித்துத் தரட்டுமா? நோன்பு ஒரு கேடயம். நீர் நெருப்பை அனைப்பது போன்று, தர்மம் பாவங்களை அனைத்துவிடும். ஒரு மனிதன் நடு இரவில் தொழவதும் (நன்மையின் ஒரு வாயிலாகும்.) பின்பு "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதினார்கள். பின்பு நபியவர்கள், 'ஒரு விடயத்தின் தலையான அம்சத்தையும், அதன் பிரதான தூணையும், அதன் உயர்நிலையையும் உனக்குக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்! அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கூறியபோது, 'தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் பிரதான தூண் தொழுகையாகும். அதன் உயர்நிலை ஜிஹாதாகும்.' என்று கூறிவிட்டு, 'அவை அனைத்தையும் பாதுகாத்துத் தரும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! அல்லாஹ்வுடைய நபியே! எனக் கூறியதும், தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய நபியே! நாம் பேசுவதற்கெல்லாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?' எனக் கேட்டபோது, 'உன் தாய் உன்னை இழக்கட்டும். முஆதே! மக்களை நரகில் முகங்குப்புற எறிந்து விடுவது, அவர்களது நாவின் அறுவடைகளைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?'
ஒட்டுமொத்த வழிகள் ஊடாக சரியாகியது (ஸஹீஹ்) இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது
ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், பின்னர் நான்கு ரக்அத்களையும் யார் பேணித் தொழுதுவருகின்றாரோ, அவரை அல்லாஹ் நரகின் மீது ஹராமாக்கிவிடுவான்.
சரியானது இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்.